திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்.. விடாமல் துரத்தும் 2019 பணப்பட்டுவாடா வழக்கு!
வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த்-க்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ரெய்டில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியிலிருந்து கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் நடத்தினர். இதில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து வெவ்வேறு இடங்களில் நடந்த ரெய்டில் மொத்தம் ரூ.10.57 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. இதில் கதிர் ஆனந்த் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று கதிர் ஆனந்த் ஆஜராகினார். இவருடன் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் என இவரது ஆதரவாளர்களும் ஆஜராகினர். இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 125(ஏ), இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் சம்மன் இதுவரை கிடைக்கவில்லை என்று கதிர் ஆனந்த் தரப்பில் சொல்லப்படுகிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications