ஆஸ்கர் நடிகர் அண்ணன் துரைமுருகன் தான்.. செல்லுமிடமெல்லாம் செம்ம பெர்பாமென்ஸ்.. ஜெயக்குமார்
வேலூர்: ஆஸ்கர் நடிகர் அண்ணன் துரைமுருகன் தான் என்றும் செல்லுமிடங்களிலெல்லாம் கண்ணீர் விட்டு கதறி அழுது வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்பொழுது
"வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஏ சி சண்முகம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுகவை பொறுத்தவரை இரட்டை இலை தேனி இல் ஒரு இலை மற்றொன்று வேலூரில் ஒரு இலை என்பது போல வேலூர் மாவட்டத்தில் நிச்சயம் ஏ சி சண்முகம் வெற்றி பெறுவார்.
திமுக தோல்வி பயத்தில் பணத்தை தண்ணி போல செலவழிக்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை முன்பு தேர்தல் வாக்குறுதியாக வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியவில்லை இதனால் விவசாயிகள் அனைவரும் கடனாளி ஆகியுள்ளனர். வங்கி கடன் தள்ளுபடி என கூறியதால் கடனாளி ஆகி விட்டனர். மாதம் தோறும் ரூபாய் 6 ஆயிரம் வழங்குவதாக கூறியது என்ன ஆனது. மாணவர்களின் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்வதாக கூறியது என்ன ஆனது.

கண்ணீர் விட்டு கதறுகிறார்
கடந்த முறை கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த முறை கூறமுடியாமல் திமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பதாகவும் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெறக்கூடாது என உதயநிதியின் ஆட்கள் வேலை வேலை செய்யாததால் மனம் உடல் மனம் உடைந்த துரைமுருகன் செல்லுமிடங்களிலெல்லாம் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகிறார்.மாபெரும் ஆஸ்கர் நடிகர் அண்ணன் துரைமுருகன் தான்.

சாதி கைவிட்டு விடும்
திமுக வேட்பாளரை பொறுத்தவரை இன்று கட்சியும் கட்சி தொண்டர்களும் கைவிடப்பட்ட நிலையில் துரைமுருகன் அவரது மகன் வெற்றி பெற செய்ய அவரது சாதியினரை மட்டும் நம்பி இருக்கிறார்கள். கடைசியில் நிச்சயம் அவருக்கு சாதியினரும் அவரை கைவிடுவது நிச்சயம்.

வேலூரில் அதிமுக வெற்றி உறுதி
ஆகவே வேலூரில் பொருத்தவரை நிச்சயம் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி" இவ்வாறு கூறினார்.

துரைமுருகன் தான் காரணம்
மேலும் பாலாற்றில் ஆந்திரா 22 தடுப்பணைகளில் உயரத்தை அதிகரித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்கையில், பாலாற்றில் ஆந்திரா தடுப்பணைகள் கட்டியது திமுகவின் ஆட்சி காலத்தில் தான் எனவும் அவை அனைத்துமே திமுக தடுத்து இருக்க வேண்டியவை எனவும் பாலாறு இந்த நிலைமைக்கு பால் ஆனதற்கு காரணம் முழுக்க முழுக்க அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் தான் எனவும் அவரின் அலட்சியத்தால் மட்டுமே ஆந்திரா 22 தடுப்பணைகளை கட்டியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications