வேலூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது.. ஐ பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
வேலூர்: வேலூரில் திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா தொடங்கியது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தந்தை பெரியார் பிறந்த நாள், திமுகவை தொடங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15) , திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி நேரலையை காண இங்கே கிளிக் செய்யவும்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்த பிறகும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முப்பெரும் விழா வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தன.
அந்த பகுதியில் திமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டன. விழாவில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் ரயில் மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வந்தார். அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நேற்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.
இன்று காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு சென்றார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்காக இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார். அங்கு திமுக கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த விழா காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்வர் கலந்து கொண்டார். முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். அது போல் வேலூரில் டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. வேலூரில் முதல்வர் வருகையையொட்டி 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு எந்தெந்த விருதுகள் யார் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கட்கும் அண்ணா விருது -மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கட்கும் கலைஞர் விருது - ஐ.பெரியசாமி அவர்கட்கும் பாவேந்தர் விருது -தென்காசி மலிகா கதிரவன் அவர்கட்கும் பேராசிரியர் விருது -பெங்களூர் ந.இராமசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications