வேலூர் ஆனந்தனுக்கு 33 வயது.. கல்யாண ஏக்கம்... வீட்டிற்குள் கண்ட காட்சியால் ஆடிப்போன போலீஸ்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே தென்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கட்டிட தொழிலாளியாவார். இவர் பெரிய நகரங்களுக்கு சென்று கட்டுமான பணிகளை செய்து வந்தார். ஆனந்தனுக்கு 33 வயது ஆகிறது. இன்னம் திருமணம் ஆகவில்லை..திருமணம் ஆகாததால் மன அழுத்ததில் இருந்து வந்த ஆனந்தன், வீட்டிற்குள் சென்று தாழ்பாள் போட்டவர், திரும்ப வரவே இல்லை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு திருமணம் என்பது நன்கு சம்பாதித்து, நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு எளிதாக நடப்பது இல்லை.. நன்கு படித்திருக்க வேண்டும்.. நல்ல வேலையில் இருக்க வேண்டும். நன்கு வேலையில் இருந்தாலும், நன்றாக படித்திருந்தாலும்,குடும்பம் எப்படி, அழகானவாரா என்று பல விஷயங்களை இன்றைக்கு பெண் வீட்டார் பார்க்கிறார்கள்.. அக்காள் தங்கையுடன் பிறந்தவர் என்றால் ஒரு மாதிரியும், ஒரே பையன் என்றால் ஒரு மாதிரியும் பெண் வீட்டார்கள் பார்க்கிறார்கள். நிறைய சொத்து, நல்ல படிப்பு, நல்ல வேலை, அழகு இவை இருந்தால் தான் இன்றைக்கு பெண் கிடைப்பது எளிதாக இருக்கிறது. மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாகே உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே தென்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவருடைய மூத்த மகன் ஆனந்தன் (வயது 33). கட்டிட தொழிலாளியான இவர் திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று இவரது குடும்பத்தினர் அனைவரும் இவரை விட்டு விட்டு கட்டிட வேலைக்கு திருப்பூர் சென்று வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஆனந்தனுக்கு நேற்று முன்தினம் இரவு அவருடைய அம்மா கல்யாணி போன் செய்துள்ளார். போனை அவர் எடுக்காத நிலையில் மீண்டும் நேற்று காலையில் போன் செய்திருக்கிறார். அப்போதும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் என்னவென்று பார்க்குமாறு கல்யாணி கூறியிருக்கிறார்.
அவர்கள் சென்று பார்த்தபோது வீடு உள் தாழ்ப்பாள் பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. ஜன்னல் வழியாக பார்த்த போது ஆனந்தன் தூக்கிட்ட உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் ஆனந்தனின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆனந்தன் இறப்புக்கு குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனந்தன் திருமணம் ஆகாமல் தனிமையில் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இதே போல் யாருமில்லா நேரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரைவிடுவதற்கு முயற்சித்தார். அப்போது உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து உயிரோடு மீட்டுள்ளார்கள். இந்த நிலையில் மன அழுத்தத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை விட்டுள்ளார் என்பது போலீசின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications