Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூதாட்டிக்கு இன்ப அதிர்ச்சி.. ஒரே உத்தரவில் நெகிழ வைத்த வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வீடு வேண்டும் என்று மனு அளிக்க வந்த மூதாட்டி, பாசத்துடன் அழைத்து சென்று இன்றைக்குள் அவரது கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிக்கு வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு சாப்பாடு வாங்கி தருமாறும் ஊழியருக்கு உத்தரவிட்டார். வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி பல அதிரடிகளுக்கு பெயர் போனவர். கடந்த ஆகஸ்ட் மாதம் குடியாத்தம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை ஒரே நாளில் மூட வைத்திருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், நாடாளுமன்ற தேர்தலின் நெருங்கும் வேளையில் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சுப்புலட்சுமி ஐஏஎஸ் வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கடந்த ஜனவரி 27ம் தேதி நியமிக்கப்பட்டார்.

vellore collector

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Group 1) குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் ஆவார். எனினும் அதே 2009 ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று, அஸ்ஸாம் மாநில கேடரில் சேர வேண்டியவர். ஆனால் சொந்த மாநிலத்தில் பணிபுரிய விரும்பியவர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்றதால் 2009ல் தமிழ்நாட்டில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 2018ல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். சுப்புலட்சுமி ஐஏஎஸ்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.

இவர் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக பொறுப்பேற்ற காலம் முதல பல அதிரடியான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு வாரமும் குறைதீர் கூட்டத்திற்கு வரும் முதியவர்களிடன் கனிவுடன் குறைகளை கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் திங்கள்கிழமையான நேற்று குறைதீர் கூட்டத்தில் வீடு வேண்டும் என்று மனு அளிக்க வந்த மூதாட்டியை கண்ட கலெக்டர் சுப்புலட்சுமி,பாசத்துடன் அழைத்து சென்று இன்றைக்குள் அவரது கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு சாப்பாடு வழங்குமாறு ஊழியருக்கு உத்தரவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக கடந்த மாதம் ஒரே நாளில் இரண்டு டாஸ்மாக் கடைகளில் மூட வைத்து அதிரடி காட்டியுள்ளார். வேலூர் அருகே கவுண்டன்ய ஆற்றின் மேலே காமராஜர் மேம்பாலம் அமைந்திருக்கிறது. கவுண்டன் ஆற்றின் கரையோரமாக 37 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்தப் பகுதியில் டாஸ்மாக் எலைட் ஷாப் மற்றும் சாதாரண டாஸ்மாக் கடை என இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி அந்த வழியாக பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்றுள்ளார். அப்போது ஒரு பாதையில் நூற்றுக்கும் அதிகமான 'குடிமகன்கள், குடித்தபடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருககிறார்கள் இதை பார்த்து அதிர்ந்து போன கலெக்டர் சுப்புலட்சுமி, 'அங்கு என்ன பிரச்னை?' என தன் காரை நிறுத்தி உதவியாளரை விசாரித்து வரச் சொல்லியிருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்ற உதவியாளர் திரும்பி வந்து, 'அம்மா அவர்கள் அனைவரும் ரோட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்போதும் நடப்பது தான் என கூறியிருக்கிறார். இதனை கேட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, 'மதியம் 12:00 மணிக்கே இவ்வளவு பேர் இங்கு அமர்ந்திருந்தால் அங்கு சாலை பணிகள் எப்படி நடக்கும்? என்று கேள்வி எழுப்பியதுடன், சாலை வசதி பின்பு எப்படி கிடைக்கும்?' என்று கோபம் அடைந்தாராம். அத்துடன் அந்த டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவுபடி அந்த இரு கடைகளும் ஒரே நாளில் மூடப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+