இதை சொல்லியே வாக்கு கேட்போம்.. களத்தில் கதிர் ஆனந்த்.. ஆலோசனையில் துரைமுருகன்.. திமுக பிளான்!
வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனைகளை மக்களிடம் சுட்டிக்காட்டி திமுக கட்சி வேலூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
வேலூர்: வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனைகளை மக்களிடம் சுட்டிக்காட்டி திமுக கட்சி வேலூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. அங்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீண்டும் தனது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையால் வேலூரில் திமுகவின் தேர்தல் பிரச்சாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது திமுக தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது.

செய்யவில்லை
இந்த மூன்று களேபரம் காரணமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அங்கு பிரச்சாரம் செய்யவில்லை. திமுக பொருளாளர் துரைமுருகனும் அங்கு பிரச்சாரம் செய்யாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 3 நாட்களாக அங்கு திமுக அடிமட்ட உறுப்பினர்கள் மட்டுமே கதிர் ஆனந்திற்காக பிரச்சாரம் செய்து வந்தனர்.

மீண்டும் பிரச்சாரம்
இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் கதிர் ஆனந்த் பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். இன்று காலை வேலூரின் சில பகுதிகளில் பிரச்சாரம் செய்ய தொடங்கினார். திமுக உறுப்பினர்கள் பலர் கதிர் ஆனந்துடன் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

என்ன பிரச்சாரம்
ஆனால் ஆச்சர்யமாக இந்த பிரச்சாரத்தில் துரைமுருகன் கலந்து கொள்ளவில்லை. தனது மகன் கதிர் ஆனந்திற்காக பிரச்சாரம் செய்யத்தான், அவர் வேலூரிலேயே டென்ட் அடித்து இருந்தார். ஆனால் தற்போது வருமான வரித்துறை சோதனை தொடர்பான சில வழக்குகளை, விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் அவர் இன்று பிரச்சாரத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஆலோசனை செய்கிறார்
துரைமுருகன் தற்போது தனது வழக்கறிஞர் மற்றும் திமுக வழக்கறிஞர் பிரிவு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பெரும்பாலும் நாளைதான் துரைமுருகன் தனது பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தற்போது கதிர் ஆனந்தாவது மீண்டும் பிரச்சாரத்திற்கு வந்து இருக்கிறாரே என்று திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதை சொல்வார்கள்
முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வருமான வரித்துறை சோதனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே திமுக பிளான் போட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை சொல்லி நாங்கள் வாக்கு கேட்க இருக்கிறோம் என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அரசு அடக்குமுறையை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று திமுகவினர் தெரிவிக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications