பணம் தரும் வேட்பாளருக்கு 10 ஆண்டு தடை! சீமான் சொல்லும் குட் ஐடியாவை அமல்படுத்திதான் பார்க்கலாமே!
வேலூர்: தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தரும் வேட்பாளருக்கு தேர்தல்களில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு உருவாகி வருகிறது.
ஜனநாயகத் திருவிழா என கொண்டாடப்படுகிறவைதான் தேர்தல்கள். ஆனால் தேர்தல் திருவிழாக்களில் நேர்மை, பிரசாரம், மக்கள் சிந்திக்கும் திறன் என்பதெல்லாம் 'கொட்டும் பணமழை'யால் அடித்து துவம்சம் செய்யப்பட்டு விடுகிறது. ஓட்டுக்கு கொடுக்கும் பணம்தான் வேட்பாளர்களின் வெற்றியை தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு அவலமானதுதான்.

இந்திய ஜனநாயகத்தில் குறிப்பாக தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் 70 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சீர்திருத்தங்கள் பொதுவாக தொடக்கங்களில் கடினமானதாக இருந்தாலும் ஏற்கப்பட்டுவிட்டால் இயல்பான ஒன்றாகிவிடும். வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை என்பது நடைமுறைக்கு வரும் போது அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இப்போதைக்கு இருக்கிறது.
இந்த வரிசைகளில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைக்கும் கோரிக்கையும் ஒன்று. அதாவது தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள், தேர்தல்களில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை விதித்துவிட்டால் எந்த தேர்தலிலு பணநாயகம் என்பது இருக்காது என்கிறார் சீமான். பணப் புழக்கம், பணப்பட்டுவாடா என்பதெல்லாம் தேர்தல் காலங்களில் சகஜமாகிவிட்டது. தேர்தல் அதிகாரிகளே நாளொன்றுக்கு இத்தனை கோடி ரூபாய் பிடிபட்டதாக அறிவிக்கின்றனர். பணப் பட்டுவாடா அதிகரித்த காரணத்தாலேயே ஆர்கே நகர், வேலூர் தொகுதிகளுக்கு தேர்தல்கள் நிறுத்தப்பட்ட சரித்திரத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு பணநாயகம் அருவெறுப்பானதாகவே இருந்து வருகிறது. பணபலத்தை சாமானியர்களால் முறியடிக்கவே முடியாத நிலைமைதான் இருக்கிறது. நிச்சயமாக ஜனநாயகத்தின் திருவிழாவாக கொண்டாடப்படும் தேர்தலை இந்த பணநாயகம் அர்த்தமற்றதாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
இத்தகைய பேரவலத்துக்கு முடிவுகட்ட, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோருவதைப் போல பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துதான் பார்ப்போமே.. அப்பவாது பணமுதலைகளின் வாக்கு வேட்டை ஓயுமா? என்கிற குரல்கள் சமூக வலைதளங்களில் அதிவேகமாக எதிரொலிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications