எமனாக மாறிய எலெக்ட்ரிக் பைக்! வேலூரில் பைக் பேட்டரி வெடித்து தந்தை - மகள் பலி
வேலூர்: சின்ன அல்லாபுரம் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் தந்தையும் மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
சின்ன அல்லாபுரத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து வருபவர் துரைவர்மா. இவர் நேற்று இரவு தனது எலெக்ட்ரிக் பைக்கை வீட்டில் நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு உறங்க சென்று உள்ளார்.

இந்த நிலையில் திடீரென எலெக்ட்ரிக் பைக்கில் பொறுத்தப்பட்டு இருந்த பேட்டரி வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது. பைக் வெடித்த சத்தம் கேட்ட விழித்த துரை வர்மாவும் அவரது 13 வயது மகள் ப்ரீத்தியும் தீ விபத்திலிருந்து தப்பிக்க வீட்டின் கழிவறையில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர்.
புகைமூட்டம் கழிவறையையும் சூழ்ந்ததால் இருவரும் அதிலிருந்து தப்பிச்செல்ல முடியாமல் மயங்கி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்து உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கழிவறையில் இறந்துகிடந்த தந்தை, மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார், பைக்குகளுக்கு மாறியுள்ளனர்.
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு எலெக்ட்ரிக் கார், பைக்குகளை உற்பத்தி செய்து வருகின்றன. அதன் வர்த்தமும் பன்மடங்கு பெருகியுள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications