ஸ்டாலினுக்கு தெரியும்.. ஓபிஎஸ்ஸுக்கு உதவி செய்வது இதனால் தான்.. விளாசிய கே.பி.முனுசாமி!
வேலூர் : எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தடுக்க, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக உதவுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் எந்த விதத்திலும் செல்வாக்கு இல்லாத தலைவர் ஓபிஎஸ் என கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்ட புகழேந்திக்கு அதிமுகவைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை என கூறியுள்ளார் கே.பி.முனுசாமி.
வேலூர் புறநகர் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி கற்பகம் இல்ல நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார்.

மேடைப் பேச்சாளர் போல
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, "அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் எந்த விதத்திலும் செல்வாக்கு இல்லாத தலைவர் ஓபிஎஸ். நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் பதவியை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறார். இது கட்சியின் தலைமையில் இருந்தவர் பேசுவது போல் இல்லை. கட்சியின் பேச்சாளர் மேடையில் பேசுவது போல் இருக்கிறது.

மாற்றி மாற்றி
கட்சி ஒரு தனிநபர் கையிலும், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சென்று விடக்கூடாது என்று அன்று கூறித்தான் தர்ம யுத்தம் நடத்தினீர்கள். நானும் உங்களுடன் இருந்தேன். கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று சொன்னவர் இன்று அவருடன் பேசுவேன், அவர்களை சேர்த்துக் கொள்வேன் என்று ஏன் சொல்கிறார்?

ஸ்டாலின் மறைமுகமாக
இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மாற்றான தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதால்தான் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் கூட மறைமுகமாக பல்வேறு வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். நம்மை எதிர்த்து வெற்றி பெறக்கூடிய பலம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அவருக்குத் தெரிகிறது.

ஈபிஎஸ்ஸுக்கு எதிராக
கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இரட்டை வேடம் போட்டு வருகிறார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசியலில் உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒருபக்கமாக உள்ளனர்.

30 எம்.எல்.ஏக்கள்
30, 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்று ஆளுங்கட்சியினர் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரங்கள் செய்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஓபிஎஸ் உடன் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட ஈபிஎஸ் பக்கம் வர வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாகத்தான் உள்ளனர்." எனத் தெரிவித்தார்.

புகழேந்தி யார்?
மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, "புகழேந்தி என்பவர் யார்? ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவராலும் இணைந்து கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் புகழேந்தி. அவர் இப்போது எந்த கட்சியில் உள்ளார்? தற்போது ஓபிஎஸ் அருகில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சித்து வருகிறார் புகழேந்தி. அவருக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. அவரைப் பற்றி கேள்வி கேட்பதே அபத்தம்." எனத் தெரிவித்தார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications