ஜாமீன் இல்லாமல் 3 லட்சம் கடன்+ 50000 ரூபாய் மானியம்.. எப்படி பெறுவது.. வேலூர் கலெக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளவர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் கலைஞர் கைவினைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.

free loan assistance of up to Rs 3 lakh with Rs 50000 subsidy vellore collector explain

கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளவர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் ரூ.50 ஆயிரம் வரை மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கட்டிட வேலைகள், மர வேலைபாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள் உள்ளிட்ட 25 வகையான கைவினை தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் இதுவரை 1,346 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 899 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 353 கடன் ஒப்பளிப்புகள் பெறப்பட்டுள்ளன. 74 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக கடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. http://www.msmeonline.tn.gov.in/kkt என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காந்திநகரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+