வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன்.. அரக்கோணத்திலும் மாற்றம்.. பழைய லுக்கை மாற்றிய அம்ரித் பாரத் திட்டம்
வேலூர்: நம்முடைய நாட்டை பொறுத்தவரை ரயில்களின் தேவை பயணிகளுக்கு அதிகமாகவே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அம்ரித் பாரத் திட்டம் என்பதை ரயில்வே கொண்டு வந்தது. இந்த திட்டம் குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி, பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது... குறிப்பாக தமிழக பயணிகளுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது.. அது என்ன தெரியுமா?
நாட்டிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் பல வருடங்களாகவே வெறும் அடிப்படை வசதிகளுடன் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், ரயில்வே ஸ்டேஷன்களில் வசதி, பாதுகாப்பு, சுத்தம், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அதற்கு ஏற்ப வளரவில்லை. அதனால்தான் இந்த குறைகளை சரிசெய்யவும், ரயில் நிலையங்களை நவீன நகர மையங்களாக மாற்றவும் அம்ரித் பாரத் திட்டம் கொண்டு வரப்பட்டது..

இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில், உள்ளமைப்பு, வெளிப்புற தோற்றம், பிளாட்பாரங்கள், நுழைவு-வெளியேறும் வழிகள், பயணிகள் வெயிட்டிங் ரூம்கள், பாத்ரூம்கள், குடிநீர், தகவல் அறிவிப்புகள் போன்ற அனைத்தும் நவீனமாக மாற்றப்படுகின்றன... முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைப்புகள் செய்யப்படுகின்றன...
ரயில் நிலையங்களில் மேம்பாடு
அதுமட்டுமல்ல, அந்தந்த பகுதியின் கலாசாரம், பாரம்பரியம் பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்களின் டிசைனிங் செய்யப்படுகிறது. சோலார் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு, பசுமை சூழல் போன்ற சுற்றுச்சூழல் அம்சங்களும் இதில் முக்கியமாக இடம்பெறுகின்றன.. சுருக்கமாக சொல்லப்போனால் நாட்டிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களை பழைய நிலையிலிருந்து எதிர்காலத்துக்கான நவீன முகமாக மாற்றும் திட்டமாக விளங்கி கொண்டிருக்கிறது இந்த அம்ரித் பாரத் திட்டம்.
அந்தவகையில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் பல ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நம்முடைய சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தெற்கு ரயில்வே இந்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டத்தில் உள்ள முக்கியமான நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 17 ரயில்வே ஸ்டேஷன்களில் தொடங்கப்பட்டது.
பரங்கிமலை - அம்ரித் பாரத் திட்டம்
இதில் பரங்கிமலை மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் பணிகள் முடிவடைந்து, அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, மேலும் சில ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 4 ரயில் நிலையங்களை முழுமையாக புதுப்பித்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, பார்க், கிண்டி, சென்னை கடற்கரை மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய 4 ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.. இந்த நிலையங்களில் பல சிவில் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. பயணிகளின் வசதிக்காக லிப்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் இறுதி கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
அரக்கோணம், ஜோலார்பேட்டை
பார்க் ரயில் நிலையத்தில், பிளாட்பாரம் ஒன்றின் அருகே புதிய முகப்பு, மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர, புதிய நடைபாதைகள் அமைத்தல், டிக்கெட் கவுண்டர்கள் கட்டுதல், புதிய கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் லிப்ட்கள் நிறுவுதல் போன்ற பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளன. இதன் மூலம் பயணிகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நிலையத்தை பயன்படுத்த முடியும்..
இதேபோல் ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், அம்பத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் ஒரே நேரத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பழைய ரயில்வே ஸ்டேஷன்கள்
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதாகும். பழைய மற்றும் சலிப்பான தோற்றத்தை மாற்றி, நவீன முகப்புடன் ரயில் நிலையங்களை அழகுபடுத்துவது இதில் முக்கிய அம்சமாக உள்ளது. அதே நேரத்தில், பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் கூடுதல் லிப்ட்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரயில் நிலையங்களுக்கு செல்லும் மற்றும் திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில் வாகன நிறுத்துமிட வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன.
புதிய லுக் மாற்றம்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், எண்ணூர், மினூர், பொத்தேரி, மறைமலைநகர், நயுடபேட்டை, பளவந்தாங்கல், அண்ணனூர், அம்மூர், வாணியம்பாடி, புத்தர் மற்றும் கடம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் லிப்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பயணிகளின் வசதியை அதிகரிப்பதுடன், ரயில் நிலையங்களின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், ரயில் நிலையங்கள் நகரத்தின் முகமாக மாறும், பயணிகளுக்கு நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும்" என்றும் தெரிவித்துள்ளனர்..
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications