நிலத்தை துல்லியமாக அளக்க செயற்கைக்கோள் வரைபடம்.. ஜிபிஎஸ் விடுங்க, சர்வேயர்களின் நில அளவீட்டில் செம
வேலூர்: GPS அடிப்படையில் நிலம் அளக்கப்பட்டு வருகின்றன.. இது செயற்கைக்கோள்கள் மூலம் நிலத்தின் இருப்பிடத்தையும் தூரத்தையும் துல்லியமாகக் கணக்கிடுகிறது.. சர்வேயர்கள், துல்லியமான தரவுகளைச் சேகரிக்க, அதிநவீன ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.. எனினும், செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையிலான துல்லிய படங்களை, தனியாரிடம் இருந்து வாங்க நில அளவை துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், மாவட்டம், தாலுகா, பிர்கா, கிராமம் என நிலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கான வரைபடங்கள் நில அளவை துறை வாயிலாக தயாரிக்கப்பட்டுள்ளன. .

இவைகளில் கிராம வரைபடத்தில், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் உட்பட்ட நிலத்தின் பரப்பளவு, அமைவிட விவரங்கள் காணப்படும்.. மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், இந்த வரைபடங்களை ஆன்லைன் முறையில் நில அளவை துறை விற்பனை செய்து வருகிறது.
ஜிபிஎஸ் நிலம் அளவீடு
நம்முடைய தமிழ்நாடு அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாக கொடுக்கும் வகையில் எல்லா துறைகளிலும் டிஜிட்டல்மயத்தை புகுத்தியபடி உள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக, நில அளவை செய்யவும் ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம். அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட முடியும்.
இதனால் மக்கள் நில அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க தேவையில்லை. சர்வே எண் வாரியாக நிலங்களின் அமைவிடம், பட்டா போன்றவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காகவே 'தமிழ் நிலம் ஜியோ' என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சொத்து பத்திரங்கள்
மேலும், சொத்து பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், உண்மையிலேயே இருக்கின்றனவா? என்பதை உறுதி செய்வதற்காக, இடம் அமைந்துள்ள நகர், தெரு போன்றவற்றை அறிந்து கொள்ளவும், ஜிபிஎஸ் போட்டோவையும் இணைக்க பதிவுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது
அதேபோல நில அளவீடு பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்ததுடன், சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்குட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இதனை தவிர, ஜிபிஎஸ் முறையில் நிலத்தை துல்லியமாக அளப்பதற்காக ரோவர் கருவிகளும் சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளன.
நிலங்களின் துல்லியமான தோற்றம்
எனினும் நிலங்களின் தற்போதைய விபரங்களை துல்லியமாக அறிவதில் சிக்கல்கள் தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.. எனவேதான் இவைகளை சரி செய்வது குறித்து, வருவாய் துறை மற்றும் நில அளவை துறை அதிகாரிகளின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது
குறிப்பாக, நிலங்களுக்கான துல்லியமான செயற்கைக்கோள் வரைபடங்களை வாங்கி, தகவல் தொகுப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டு, இதற்கான பணியையும் நில அளவை துறை ஆரம்பித்திருக்கிறதாம். நிலங்களின் தோற்றத்தை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக 1.30 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு நிலங்கள் தொடர்பான துல்லிய செயற்கைக்கோள் படங்கள் வாங்கப்பட முடிவாகி உள்ளதாக தெரிகிறது.
செயற்கைக்கோள் படங்கள்
இதுகுறித்து நில அளவை துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, இந்த செயற்கைக்கோள் படங்கள், புள்ளி விபரங்களை 30 செமீ வரை விரிவாக்கம் செய்து பார்க்கும் அளவுக்கு துல்லியமாக இருக்கும்.
இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து இந்த படங்கள் வாங்கப்பட உள்ளன.. இதற்கான நிறுவனங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும்.. இந்த வரைபடங்கள் வாங்கியபிறகு, நிலங்களின் துல்லியமான விபரங்களை அனைவராலும் அறிய முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications