கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.. அரசு வீடு கட்ட பணம் கேட்டால் 1 ரூபாய் கூட தராதீங்க.. அமைச்சரின் அதிரடி
வேலூர்: 1000 ரூபாய் உரிமைத்தொகை மற்றும் கலைஞரின் கனவு இல்லம் குறித்து, திமுக அமைச்சர் துரைமுருகன் முக்கிய தகவல்களை வேலூர் மாவட்டத்தில் வெளியிட்டுள்ளார்.. இந்த தகவலானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து வருகிறது.
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது.

"கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
புறம்போக்கு நிலம்: சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது... அதேபோல, சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் ரூ.3.5 லட்சம் பணம் வீடு கட்ட வழங்கப்படும்.. குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது.
கட்டுமானம்: வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். பயனாளிகளுக்கு, அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.
இதை பயன்படுத்தி பயனாளிகள் தங்களுடைய வீடுகளை தாங்களே கட்டிக்கொள்ள வேண்டும்.. அரசு சார்பில் இருந்து நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.. கூடுதலாக நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது..
காட்பாடி: இப்படிப்பட்ட சூழலில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து மூத்த தலைவர் துரைமுருகன் முக்கிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைய வழங்கி பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு யாராவது லஞ்சம் கேட்டால் ஒரு ரூபாய் கூட தராதீர்கள்.. ஒரு வீடு கட்ட அரசு ரூ.3.5 லட்சத்தை ஒதுக்கும் நிலையில் சிலர் ரூ.10 ஆயிரம் கொடு, ரூ.15 ஆயிரம் கொடு என்று லஞ்சம் கேட்பதாக தகவல் வருகிறது. யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும்.. எவனுக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம்... அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பேரம் பேசி வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம்..
மகளிர் உரிமைத்தொகை: 1000 ரூபாய் உரிமைத்தொகை பெறாதவர் பட்டியல் தயாராகி வருகிறது. அவர்களுக்கெல்லாம் விரைவில் வரும். பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும். சேர்காட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையும் அடுத்த மாதம் திறக்கப்படும்.
காட்பாடி தொகுதியில் இல்லாதது என எதுவுமே கிடையாது. என்னுடைய தொகுதிக்கு நான் எதுவும் செய்யும் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு கீழே உள்ள தலைவர், கவுன்சிலர் போன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நான் மட்டுமே யோக்கியனாக இருந்தால் போதாது.
துரைமுருகன்: எதிரிகளே இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள். எனக்கு உண்ண உணவாக, மூச்சுக்காற்றாக, ரத்த ஓட்டமாக இருப்பது எனது கழக தொண்டர்கள் தான். அவர்களிடம் நான் சில நேரம் கோபித்துக்கொள்வேன்.. அது என்னுடைய உரிமை. எல்லாத்தையும் இந்த துரைமுருகன் பார்த்துக்கொள்வார் என மகிழ்ச்சியோடு போங்க.. நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று உரையாற்றினார் துரைமுருகன்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications