குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. சம்மர் வந்தாச்சு.. ரேஷன் கடைகளுக்கு வேலூர் கலெக்டர் சூப்பர் ஆர்டர்
வேலூர்: உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து பேசும்போது 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருவதாக கூறியிருப்பது ரேஷன்தாரர்களுக்கு பெருத்த நிம்மதியை தந்துள்ளது.. இந்நிலையில், உணவுப் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் எப்போதும் கனிவாகப் பேச வேண்டும் எனக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி அறிவுரை வழங்கியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பணி நிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வேலூர் மாவட்டத்தில், பணி நிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பயிற்சி வகுப்பு
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், அனைத்து கூட்டுறவு நியாய விலைக் கடையில் பணிபுரியும் 450 விற்பனையாளர்கள், கட்டுநர்களில் அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களில் பணிபுரியும் சுமார் 238 விற்பனையாளர்கள் என அனைவருமே பங்கேற்றனர்.
முன்னதாக, கூட்டுறவுத் துறை சார்பில், விற்பனையாளர்கள், கட்டுநர் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையேயான நல் உறவை மேம்படுத்துதல் குறித்து பட்டிமன்றம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஹோமியோ பதி மருத்துவர் அருண்குமார், மன அழுத்தம் குறித்து பயிற்சி அளித்தார். பிறகு, விற்பனையாளர்களுக்கு பிஓஎஸ் இயந்திரத்தை உபயோகப்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
விற்பனையாளர்கள்
இதையடுதது, அணைக் கட்டு, குடியாத்தம், பேரணாம் பட்டு, கே.வி.குப்பம் வட்டாரங்களில் பணிபுரியும் விற்பனையாளர் களில் சிறப்பாகச் செயல்பட்ட விற்பனையாளர்களுக்கு வட்டாரத்துக்கு இருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசும்போது, "நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போது கோடைக் காலம் என்பதால் அவர்களிடம் எப்போதும் கனிவாகப் பேசவேண்டும். நியாய விலை கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியில் கடமை, பொறுப்பு உணர்ந்து பணியாற்ற வேண்டும். விற்பனையாளர்கள் தங்களது குறைகளை இணைப் பதிவாளர், துணைப்பதிவாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
கோடை காலம் உத்தரவு வருமா?
கோடைக்காலம் துவங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில உத்தரவுகள் நியாயவிலை கடைகளுக்கு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.. காரணம், கடந்த வருடம் மார்ச் மாதம், கோடைக்காலம் துவங்கியதையடுத்து, ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதில், பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வெயிலில் அலைக்கழிக்கப்பட கூடாது , அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் மொத்தமாக வழங்க வேண்டும் எனறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த நன்மையையும் தந்திருந்தது. எனவே, மீண்டும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications