அரசு வேலை என அல்வா கொடுத்த தேனி இளைஞர்.. வேலூர் கலெக்டர் ஆபிஸில் வசமாக சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற கலெக்டர் அலுவலகம் வந்த தேனி வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அரசு வேலை வாங்கித்தருவதாக கூறும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தி உள்ளார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக குடியாத்தத்தை சேர்ந்த வாலிபரிடம் நடந்த மோசடி சம்பவத்தை தொடர்ந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவருடைய மகன் அஜித்குமார் (வயது 28). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வேலை தேடி வந்தார். அப்போது இவருக்கு தெரிந்த உறவினர் ஒருவர் மூலம் தேனியை சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆகியிருக்கிறார். அவர் அஜித்குமாருக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்றும் கூறினாராம்.

How did a Theni youth get arrested at the Vellore Collectorate Office over a government job racket

முதல் கட்டமாக ரூ.80 ஆயிரம் அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து அஜித்குமாரிடம் சுய விவர குறிப்பு, சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஒருவர் பெற்றுள்ளார். தொடர்ந்து ரூ.1.70 லட்சம் வழங்கினால் பணி ஆணை வாங்கித்தருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பணத்துடன் வருமாறு அந்த பெண் கூறினாராம்.

அரசு வேலை இல்லை

இதனால் அஜித்குமாரும் அவரது தந்தையும் பணத்தை தயார் செய்து கொண்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை தனது நண்பருடன் வந்திருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பாக அவர்கள் விசாரித்தனர். அங்கிருந்த அரசு ஊழியர்கள் அரசு வேலை எதுவும் காலியாக இல்லை என்றும், பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலை யாருக்கும் வழங்கமாட்டார்கள் என்றும், யாரோ உங்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் அதிர்ந்து போனார்கள்.

வேலூர் கலெக்டர் ஆபிஸ்

இதனிடையே பணம் வாங்குவதற்காக வந்த நபர் கலெக்டர் அலுவலகம் வந்துவிட்டதாக அவர்களிடம் போனில் தெரிவித்தார். தொடர்ந்து அவரை பிடிப்பதற்காக அஜித்குமார் மற்றும் அவரது தந்தை முடிவு செய்து, இதுகுறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கூறினார்கள். தொடர்ந்து அந்த நபரை பிடிப்பதற்காக போலீசார் மறைந்திருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த நபர் அஜித்குமாரிடம் பணம் கேட்டார். உடனே அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


தேனி இளைஞர்

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தேனியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என்பது தெரியவந்தது. அஜித்குமாரிடம் பெறப்பட்ட தொகையில் ரூ.30 ஆயிரத்தை உடனடியாக அவர், அந்த பெண்ணிடம் வாங்கி திருப்பி வழங்கி விட்டார். எனினும் அவரிடம் போலீசார் அந்த பெண் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் கலெக்டர் அறிவுரை

இந்த விவகாரத்தை தொடர்ந்து வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "அரசு நிர்வாகத்தில் ஆட்கள் தேர்வானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற அரசு தேர்வாணையங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும். அல்லது சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் தினசரி செய்தித்தாள்களிலோ அல்லது அரசு அலுவலகங்களிலோ அறிவிப்பாக வெளியிடப்பட்டு முறையாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னரே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், இங்கோ அல்லது பிற துறைகளிலோ அரசு வேலை வாங்கி தருவதாக பொதுமக்களிடம் ஒரு சில நபர்கள் ஏமாற்றி பணம் பெறுவதாக தகவல் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களும் அரசு பணிகளில் ஆட்தேர்வு மற்றும் இதர பணிகளுக்கு மூன்றாம் நபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+