வேலூரில் அப்பாவும் மகனும் செய்யுற காரியமா இது.. கர்மா சும்மா விடாதுன்றது இதுதானா.. சிக்கியது எப்படி?
வேலூர்: வேலூர் அருகே அப்பாவும் மகனும் செய்யுற காரியமா இது.. என்பது போல் சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு லூர்துநகரை சேர்ந்த முருகேஷ் என்ற மைக்கேல் என்பவரும், அவரது மகன் நித்திஷ் கிளமெண்ட் என்பவரும் சேர்ந்து வேலூர் பகுதிகளில் எங்கெல்லாம் பூட்டியிருக்கிறதோ, அங்கே எல்லாம் போய் திருடுவார்களாம். நகை பணம் திருடி ஜாலியாக வாழ்ந்தவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.
திருடுவதையே தொழிலாக கொண்டவர்கள் எப்போதுமே திருந்துவது இல்லை.. ஜாலியாக திருடி உல்லாசமாக வாழ்க்கை நடத்துவார்கள்.. ஒரே திருட்டு ஓகோ என்று வாழ்க்கை என்பது போல் தான் இருக்கும்.. ஆனால் கர்மா சும்மாவிடாது என்று சொல்வார்கள்.. ஏனெனில் பல நாள் திருடன் கண்டிப்பாக ஒரு நாள் சிக்குவான்று என்று சொல்வார்கள். அது திருடர்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக வருகிறது. வீடுகளில் நகை பணம் திருடி ஜாலியாக வாழும் திருடர்கள், இன்றைக்கு சிசிடிவி காட்சிகளால் சிக்கிவிடுகிறார்கள்.

அதிலும் சிக்காதவர்கள் போலீசாரின் சோதனைகளில் சிக்குவது அதிகமாக நடக்கும்.. அதேபோல் அன்றைக்கு திருடியிருக்க மாட்டார்கள். வேறு ஒருசமயத்தில் தான் திருடியிருப்பார்கள். ஆனால் சும்மா சாலையில் செல்வார்கள்.. சம்பந்தமே இல்லாத இடங்களில், சம்பந்தமே இல்லாத பகுதியில் முண்ணுக்கு பின் முரணாக பேசி மாட்டிக்கொள்வார்கள்.. அப்படித்தான் வேலூர் அருகே திருடர்கள் சிக்கியுள்ளார்கள். அவர்கள் இருவரும் அப்பா மகன் என்பதை கேட்டு போலீசார் ஆடிப்போனார்கள்.
வேலூரை அடுத்த ஊசூரில் தனிப்படை போலீசார் நேற்று திருடர்களை பிடிக்கும் நோக்கில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் நின்ற போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின்னர் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த தனிப்படையினர் பாகாயம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு லூர்துநகரை சேர்ந்த 55 வயதாகும் முருகேஷ் என்ற மைக்கேல் என்பதும், அவருடைய மகன் நித்திஷ் கிளமெண்ட் (21) என்பதும் தெரியவந்தது. மைக்கேல் தனது மனைவி, மகன், மகள் உள்பட 5 பேரும் நோட்டமிட்டு கடந்தாண்டு மார்ச் மாதம் வேலூர் ஓட்டேரி கமலாட்சிபுரத்தை சேர்ந்த சென்னை ஐ.டி. ஊழியரான தனசேகர், சாய்நாதபுரத்தை சேர்ந்த ஏச்சியப்பன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியதும், அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதனிடையே மைக்கேல் மீது மீது பெங்களூருவில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடிய 20 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications