மல்லிகாவுக்கு எப்ப பார்த்தாலும் போன்.. என்னையும் கிட்ட சேர்க்கல.. தீவைத்து கொளுத்திய 65 வயது தாத்தா
மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார் திருப்பத்தூரில்!
திருப்பத்தூர்: "60 வயசு மல்லிகா சரி இல்லை.. எப்ப பாரு போன்.. என் உடம்பில் வெள்ளை தழும்புகள் வரவும், என்னை கிட்டயே சேர்க்கலை.. அதான் பெட்ரோல் ஊற்றி தீ வைச்சு கொளுத்திட்டேன்" என்று 65 வயது தாத்தா வாக்குமூலம் தந்துள்ளார். இந்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.
திருப்பத்தூரை சேர்ந்தவர் சேஷாசலம்.. 65 வயதாகிறது.. ஒரு அடகுக் கடையில் வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி மல்லிகா.. அவருக்கு 60 வயதாகிறது. இந்த தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்குமே கல்யாணமாகிவிட்டது.

இதனால் சேஷாசலமும் மல்லிகாவும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில், சேஷாலத்துக்கு உடம்பெல்லாம் வெள்ளை தழும்பு இருக்கும்.. 10 வருஷத்துக்கு முன்பு வெள்ளைத் தழும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அதனால், உடலில் நிறைய இடங்களில் இந்த வெள்ளை தழும்புகள் உள்ளன.. இதை பார்த்த மல்லிகா அடிக்கடி கணவரை மனசு நோகும்படி பேசிவந்துள்ளார்.
இதனால் சேஷாத்திரி அவமானப்பட்டுள்ளார்.. தனிமையில் அழுதுள்ளார்.. இவரை மல்லிகா சரியாககூட கவனிப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். இதனால் தம்பதிக்குள் நிறைய சண்டை வந்து போயுள்ளது.. அதனால், மனைவியை கொன்றே விடுவது என்று சேஷாசலம் முடிவு செய்து விட்டார்.
சம்பவத்தன்று மல்லிகா தூங்கி கொண்டிருக்கம்போது, பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீயையும் வைத்துவிட்டார் சேஷாசலம்.. இதனால் தீயில் சிக்கி மல்லிகா அலறி துடித்தார்.. அடுத்த சில நிமிடங்களிலேயே மல்லிகா கருகி இறந்துவிட்டார்.. தகவலறிந்து, விரைந்து வந்த திருப்பத்தூர் போலீஸார் மல்லிகாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய கொண்டு சென்றனர்.
சேஷாசலத்தை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கலங்கியபடியே சொல்லும்போது, "கல்யாணம் ஆகி 40 வருஷமாகுது.. அப்ப இருந்தே மல்லிகாவின் செயல்பாடு சரியில்லை.. எப்ப பாரு போன்தான்.. அதுவும் எனக்கு வெள்ளை தழும்பு ஏற்பட்ட பிறகு என்னை அருவருப்பாக பார்த்தாள்.. கிட்ட சேர்க்கவே இல்லை.. காயப்படுத்தி பேசியபடியே இருந்தாள்.. மன உளைச்சலில் சிக்கி தவித்தேன்.. அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாக வாக்குமூலம் தந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications