ஜோலார்பேட்டையில் மிக்சர் மாஸ்டருக்கு, கடை ஓனர் மனைவி மீது கள்ளக்காதல்.. திருப்பத்தூரில் செம ட்விஸ்ட்
வேலூர்: கள்ளக்காதல்கள் அனைத்துமே குடும்ப வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிடுகின்றன.. விவாகரத்துகள், தற்கொலைகள், கொலைகள் என சர்வசாதாரணமாக இந்தியாவில் நடந்து வருகின்றன. தாலி கட்டிய கணவனையும், பெற்ற குழந்தைகளையும் பெண்கள் கொலை செய்வதைபோல, மனைவியையும் ஈவிரக்கமின்றி கணவன்கள் கொல்வதும் பெருகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், திருப்பத்தூர் மாவட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் என்பவருக்கு 35 வயதாகிறது.. இவர் பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ரஹாரம் என்ற பகுதியில் மிக்சர் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கம்பெனியில் மிக்சர் போடும் மாஸ்டராக வேலை பார்த்து வருபவர் பவன்குமார்.. 19 வயதான பவன்குமாரும், இதே கே.பி.அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர்தான்.. பவன்குமாருக்கு உதவியாக, அவரது தம்பி 17 வயது சிறுவனும் மிக்சர் போடும் பணியில் உதவியாக இருந்தார்.
இந்நிலையில் பவன்குமாருக்கும், கடை ஓனர் அல்போன்சின் மனைவி சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் 30 வயது சத்யாவுக்கு, 19 வயது பவன்குமார் மீது கள்ளக்காதலும் வந்துள்ளது.. இதையடுத்து இருவருமே தகாத முறையில் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை
இந்த விஷயம் கடை ஓனர் அல்போன்சுக்கு 4 மாதங்களுக்கு முன்பு தெரியவந்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார்.. உடனே பவன்குமாரையும், அவரது தம்பியையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.. இதனால் அண்ணனும், தம்பியும் திருப்பத்தூர் மாவட்டம் மரிமாணிக்குப்பம் தோட்டிகுட்டை என்ற கிராமத்தில் பாட்டி வீட்டில் வந்து தங்கியிருந்தார்கள்..
ஆனாலும், பவன்குமார் இல்லாத உறவை சத்யாவால் ஏற்க முடியவில்லை.. இதனால் பவன்குமாரிடம் தினமும் சத்யா போனில் பேசி வந்தார்.. மேலும், அடிக்கடி தனிமையிலும் இருவரும் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது... இந்த விஷயம் மறுபடியும், கடை ஓனர் அல்போன்சுக்கு சில வாரங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது..
விவாகரத்து கேட்ட மனைவி
உடனே மனைவியை கண்டித்து, கடுமையாக தாக்கி உள்ளார்.. ஏற்கனவே தங்களது கள்ளக்காதலை பிரித்துவிட்ட ஆத்திரத்தில் இருந்த சத்யா, கணவர் தன் மீது தாக்குதல் நடத்தவும், இதையே சாக்காக வைத்து, கணவர் மீது பெங்களூரு போலீசில் புகார் அளித்தார்... மேலும் விவகாரத்தும் கோரினார்.
பவன்குமாருக்காக தன்னிடமிருந்து பிரிந்து செல்ல மனைவி முடிவெடுத்ததுடன், விவாகரத்தும் கேட்பதையறிந்து, கடை ஓனர் அல்போன்ஸ் உச்சக்கட்ட ஆவேசமானர்..
மனைவியின் கள்ளக்காதலனை உயிருடன் விடவே கூடாது என்று முடிவெடுத்தார்.. அதன்படி நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து காரில் வந்த அல்போன்ஸ், ஜோலார்பேட்டையில் பவன்குமார் தங்கியிருந்த பாட்டி வீட்டை 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தார்...
தப்பியோடிய கும்பல்
ஆனால், அந்த நேரத்தில் பவன்குமாரின் தம்பி மட்டுமே இருந்தார்.. எனவே அந்த சிறுவனை காரில் கடத்திக்கொண்டு போய் ஒரு இடத்தில் அடைத்து வைத்து, பவன்குமார் எங்கே இருக்கிறார்? என்று கேட்டு வந்துள்ளனர். அத்துடன், பாட்டி வீட்டையும் நோட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பவன்குமார், தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறார்.. அங்கே நோட்டமிட்டு கொண்டிருந்த அல்போன்ஸ், உடனே காரில் அங்கு வந்து, பவன்குமாரை சுற்றி வளைத்துக்கொண்டு கத்தியால் சரமாரி குத்தினார்கள்.. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பவன்குமார் விழுந்துவிடவும், அல்போன்ஸ் உடனே அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை
கத்தியால் குத்தப்பட்ட பவன்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, பவன்குமாரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், பிறகு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி பவன்குமார் இறந்துவிட்டார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அதற்குள் அல்போன்ஸ் பெங்களூருவில் பதுங்கி கொண்டார்.. எனினும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, அல்போன்சையும், நண்பர்கள் பாக்யராஜ் 40, பொன்னையா 37, அழகு என்கிற கதிர்வேலன்(41) ஆகிய 4 பேரையும் கைது செய்து, திருப்பத்தூர் ஜெயிலில் அடைத்தனர்.
அதிர்ச்சி வாக்குமூலம்
பிறகு அல்போன்ஸிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்களை சொன்னாராம்.. "என்னுடைய மனைவியிடம் கள்ளத்தொடர்பில் பவன்குமார் ஈடுபட்டு வந்தார்.. அதனால் பவன்குமாரை வேலையில் இருந்து விரட்டினேன். அப்போதுகூட என்னுடைய மனைவியுடனான கள்ளத்தொடர்பை விடவில்லை..
இதுபோக என்னுடைய மனைவியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பவன்குமார் வாங்கியிருக்கிறார்.. இந்த கள்ளக்காதலால்தான், என்னையே விவாகரத்து செய்யும் முடிவுக்கு என் மனைவி வந்தார். அதனால்தான் நண்பர்களுடன் சேர்ந்து வீடு தேடி சென்று பவன்குமாரை வெட்டிக்கொன்றேன்" என்றாராம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications