கோகிலாவுக்கு 3 பேருடன் உறவு.. நிறைய ஆண் நண்பர்கள் வேற.. பெண் தறிகெட்டு போனால் இப்படித்தான் ஆகும்!
லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்
வேலூர்: கோகிலாவுக்கு 3 பேருடன் உறவு.. இவர்களை தவிர நிறைய ஆண் நண்பர்களும் உண்டு.. திருமணமான ஒரு பெண் தறிகெட்டு போனால் எப்படி வாழ்வு சின்னாபின்னாமாகும் என்பதற்கு உதாரணம்தான் கோகிலா!
Recommended Video
காட்பாடி வஞ்சூரை சேர்ந்தவர் சுனில்.. இவருக்கு 28 வயதாகிறது.. கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் இவர் மீது உள்ளது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் சுனில் இறந்து கிடந்தார்.. அவரை யாரோ மிக கொடுமையாக கொன்றுள்ளது தெரியவந்தது.. அதனால் விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் கோகிலா பெயர் அடிபட்டது.
கோகிலாவுக்கும், சுனிலுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது தெரியவந்தது.. அதனால் கோகிலாவை விசாரிக்கலாம் என்றார் அவர் மாயமாகி இருந்தார்.. அதனால் அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது.. அப்போதுதான் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. மணிகண்டனுக்கும் 28 வயதுதான்.. அதனால் மணிகண்டனை போலீசார் தேடி பிடித்தபோது இன்னொரு டிரைவர் சதீஷ்குமார் சிக்கினார்.. அவருக்கும் வயது 28தான்.. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொன்னதாவது:
"கோகிலாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. கணவர் பெயர் இப்ராகிம்.. விருதம்பட்டில் தம்பதி இருவரும் வசிக்க ஆரம்பித்தனர்.. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.. என் சொந்த ஊர் மன்னார்குடி.. வேலை தேடி வந்தபோது இப்ராகிம் எனக்கு நண்பனானான்.. இப்ராகிம் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாலும், என்னையும் அவனுடனேயே தங்க வைத்து கொண்டான்.
அப்போதுதான் கோகிலாவின் நடவடிக்கையை கவனித்தேன்.. நிறைய பேருடன் நெருக்கமாக பழகினார்.. அப்படித்தான் சுனிலும் பழகினான்.. இவர்கள் 2 பேருக்கும் 8 வருஷமாக உறவு இருந்துள்ளது.. என் நண்பன் இப்ராகிமுக்கு விஷயம் தெரிந்து துடிச்சு போய்ட்டான்.. கோகிலாவை கண்டித்தான்.. சுனிலையும் எச்சரித்தான்.. ஆனால் சுனில், ஆத்திரமடைந்து இப்ராகிமை அடித்து உதைத்தான். அதனால் இப்ராகிம் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே போய் விட்டான்.
இதனால் கோகிலா தனி ஆளாக நிற்கவும், நான் துணைக்கு போனேன்.. நானும், கோகிலாவும் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கினோம்.. என்னுடன் அவள் நெருங்கி பழகவும், சுனிலிடமிருந்து விலகத் தொடங்கினாள். ஆனாலும், சுனில் விடவில்லை.. தினமும் போதையில் கோகிலாவுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்தபடியே இருந்தான்.. அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்தினான். இதை பற்றி என்னிடம் கோகிலா சொல்லி அழவும், சுனிலை தீர்த்துக்கட்ட பிளான் பண்ணினோம்.. அதனால் கோகிலா, அவளின் அப்பா முத்து, என் நண்பன் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் ஒளிந்திருந்து சுனிலை அடித்து கொன்றோம்.
அப்போது சுனில் மதுபோதையில் இருக்கவும் எங்களுக்கு வசதியாக போயிற்று.. நடுராத்திரி ஆனதும் சடலத்தை தூக்கி சென்று பாலாற்றங்கரையில் போட்டுவிட்டோம்.. ஆளுக்கு ஒரு பக்கம் தலைமறைவாகிவிட்டோம்" என்றார். இதையடுத்து மணிகண்டனையும், சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கோகிலாவும், அவரது அப்பாவும் எங்கே என்று தெரியவில்லை.. அதனால் அவரை தேடி வருகிறார்கள்!!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications