அரை நிர்வாண நிலையில்.. சேலையால் கழுத்தை நெறித்து தண்டவாளத்தில் வீசப்பட்ட பெண்.. சிக்கிய காதலன்!

ஆம்பூர் அருகே பெண்ணை கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்: அரை நிர்வாண நிலையில், பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து.. தண்டவாளத்தில் வீசிய காதலனை போலீசார் ஒரு மாதம் கழித்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆம்பூர் அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பச்சகுப்பம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. அவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை.

Man arrested in Lover murder case near Ambur

ஆனால் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்று மட்டும் உறுதியாக தெரிந்தது. அவரது ஒரு கை, ஒரு கால் துண்டாகி கிடந்தது. புடவையால், அந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன.

இதனால் அந்த பெண் ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்பதும் யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க ரெயில்வே தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

இது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணின் புகைப்படமும் இணையத்தில் பரவியது. இந்தநிலையில் ஒரு மாதம் கழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண், தஞ்சாவூர் மாவட்டம் மேல் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிவரத்தினம் என்பது தெரியவந்துள்ளது.

கணவரை பிரிந்து வாழும் சிவரத்தினத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் கள்ள உறவு இருந்திருக்கிறது. இதையடுத்து, போலீசார் ஏழுமலையை பிடித்து விசாரித்ததில், சிவரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும்போது, இருவருக்கும் உறவு ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 18-ந் தேதி இருவரும் குப்பம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, வாய்த்தகராறு ஏற்பட்டு அதில், ஆத்திரமடைந்து சிவரத்தினத்தை அடித்தும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து தண்டவாளத்தின் அருகே வீசி விட்டதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் ஏழுமலையிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+