மச்சினிச்சி மேல ஒரு இது.. "அவருக்கு" அது தெரிஞ்சு போய்.. கத்தியால் ஒரே குத்து.. இது தேவையா மாமா?!

மச்சினிச்சியை திருமணம் செய்ய முயன்றவர் கொலை செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: மச்சினிச்சி மேல ஒரு "இது" வந்துவிட்டது மாமாவுக்கு.. இந்த விஷயம் மச்சினிச்சியின் காதலனுக்கு தெரிந்துவிட, அரிவாளுடன் வந்து மாமாவை வெட்டிவிட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வீ. டி.பாளையம் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் குமாரசாமி.. இவரது மகள் சாமுண்டீஸ்வரி... துரைபாபுவுடன் இவருக்கு கல்யாணம் ஆனது.. துரைபாபு திருப்பதியை சேர்ந்தவர்.

கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகியும், இவர்களுக்கு குழந்தை இல்லை.. இதனிடையே தற்போது லாக்டவுன் என்பதும், துரைபாபு மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.

 துரைபாபு

துரைபாபு

இங்கு கடந்த 3 மாசமாக தங்கி வந்திருக்கிறார்.. அந்த நேரத்தில்தான் மச்சினிச்சி இவர் கண்ணில் பட்டுவிட்டார்.. மனைவியின் தங்கை மீது துரைபாபுவுக்கு காதல் வந்துவிட்டது. அந்த மச்சினிச்சிக்கு 19 வயசாகிறது.. பெயர் பார்வதி.. 10 வருஷம் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த துரைபாபு, பார்வதியை 2வது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.

பூவரசன்

பூவரசன்

ஆனால் பார்வதியோ பூவரசன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. 4 வருட காதல் அது.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. பார்வதியின் இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.. அதனால் பார்வதியின் அப்பா குமாரசாமி மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

 கொன்னுடுவேன்

கொன்னுடுவேன்

மச்சினிச்சி மேல் உயிராய் இருந்த துரைபாபுவுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் கொதித்து போய்விட்டார்.. பூவரசனை நேரில் சந்தித்து துரைபாபு பலமுறை எச்சரிக்கை விடுத்தாராம்.. உங்க 2 பேரையும் நான் சேரவே விடமாட்டேன்.. கொன்னுடுவேன்" என்று மிரட்டி இருக்கிறார். மேலும் மச்சினிச்சியிடம், தன்னைதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷனும் போட்டுள்ளார்.

அரிவாள்

அரிவாள்

இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி பூவரசனிடம் இதை பற்றி சொல்லவும், பூவரசன் அரிவாளுடன் கிளம்பி வந்துவிட்டார்.. துரைபாபுடன் தகராறில் ஈடுபட்டார்.. கட்டினால் மச்சினிச்சியைதான் கட்டுவேன் என்று துரைபாபு சொல்லி கொண்டே இருக்கவும், பொறுமை இழந்த பூவரசன் கத்தியால் துரைபாபுவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்... இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த துரைபாபுவை ஆபத்தான நிலையில் திருப்பதி ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். தொடர் விசாரணையும் நடந்து வருகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+