குருகுல கல்வியில் மாணவர்கள் அறிவு வளர்ந்து.. புதிய கல்விக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை.. ஆளுநர் ரவி!
வேலூர்: குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள், புரிதல் இருந்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தான் புதிய கல்விக் கொள்கை என்றும், புதிய கல்விக் கொள்கையை பற்றி பலருக்கும் விழிப்புணர்வும், புரிதலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அரசு இடையில் தொடர்ச்சியாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் தேசிய கீதம் முதலில் ஒளிபரப்பவில்லை என்று ஆளுநர் உரையை படிக்காமலேயே புறப்பட்டார். இது கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்கதையாகி வருகிறது.

அதேபோல் திராவிடம் தொடர்பாக ஆளுநர் பேசி வரும் கருத்துகள், புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசி வரும் கருத்துகள் தொடர்ந்து விவாதமாகி வருகிறது. ஆளுநரின் பேச்சிற்கு திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் புதிய கல்விக் கொள்கை குறித்து துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார்.
வேலூரில் தென் மண்டல துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்த பின்னர் நம்முடைய கல்வி கற்றல் முறையை மாற்றிவிட்டார்கள். அதனை நாம் தற்போது மீட்டெடுக்க வேண்டும். அன்றைய காலத்தில் அரசர்கள் கல்வியில் தலையிடவில்லை.
குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையில் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள். இதனால் மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையில் நல்ல புரிதல் இருந்தது. ஆசியர்களும், மாணவர்களும் தங்களின் அறிவையும் வளர்த்து கொண்டார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார். மாநிலங்களில் கல்வி ஆரோக்கியமாக இல்லை.
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டுஇ வருவது தான் புதிய கல்விக் கொள்கை. இந்த புதிய கல்விக் கொள்கையை பற்றி பலருக்கும் விழிப்புணர்வும், பெரிதாக புரிதலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications