நாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..!
வேலூர்: அதிமுக பிரமுகர் இல்ல மணவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்களை பாடி அசத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்த கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திருமண வீட்டில் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாளை நாமதே, இந்த நாளும் நமதே என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட அமைச்சர் கே.சி.வீரமணி சற்றும் யோசிக்காமல் மேடையேறி சென்று மைக்கை பிடித்து பாடத் தொடங்கினார்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே... தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்... என அமைச்சர் ராகம் போட்டு பாடத் தொடங்கியதால் கீழிருந்த அதிமுகவினர் உற்சாகம் பொங்க கோரஸ் குரல் எழுப்பினர். அந்தப் பாடலை முழுமயாக பாடி முடித்துபின்னர் மேடையிறங்கிய அமைச்சர் கே.சி.வீரமணியை சூழ்ந்து கொண்டு 'அண்ணா பாட்டு சூப்பர்ணா', 'அசத்திடீங்கண்ணா' என ரத்தத்தின் ரத்தங்கள் ஐஸ் வைத்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல்வாதிகள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை. அந்த வகையில் மக்கள் கூடும் இடங்களான திருமண விழாக்கள், விஷேஷ நிகழ்ச்சிகள் எந்த இடமாக இருந்தாலும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமைச்சர் கே.சி.வீரமணி இதேபோல் பலமுறை கட்சி நிகழ்ச்சிகளிலும் தொண்டர்கள் மத்தியில் பாடல் பாடக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications