Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாமியார்தான்.. ஆனால் "ஆம்பளைங்களை"த்தான் ரொம்ப பிடிக்குமாம்.. வெலவெலத்துப் போன வேலூர்!

மோசடி வழக்கில் சிக்கிய வேலூர் சாமியாரிடம் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வெறும் ஆண்கள்தான் பிடிக்குமாம் இந்த சாமியாருக்கு.. ஆண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும், அவர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும் வேலூரர் சாமியார் மீது அடுத்தடுத்த புகார்கள் கிளம்பி உள்ளன.

2 நாட்களாக ஒரு சாமியார் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அவருடைய நிஜமான பெயர் சாந்தகுமார்.. சாமியாராக மாறிய பிறகு சாந்தா சுவாமிகள் என்று வைத்து கொண்டார்.

வேலுர் மாவட்டம் திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்தவர். இவர்மீதுதான் அடுக்கடுக்காக புகார் கிளம்பி உள்ளது.

 பெங்களூர்

பெங்களூர்

தன்னிடம் யாராவது வசதியான பக்தர்கள் வந்தால், அவர்களிடம் பிசினஸ் சம்பந்தமாக பேசுவாராம்.. பிறகு பெங்களூரில் தன்னுடைய நண்பர் கமலக்கார ரெட்டி என்பவர் இருப்பதாகவும், அவரிடம் பணத்தை முதலீடு செய்தார், பணம் இரட்டாகும் என்று சொல்லி பணத்தை கறந்துள்ளார்.. இப்படித்தான் 4 பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். அது சம்பந்தமாக புகார் வரவும்தான், ராணிப்பேட்டை போலீஸார் சாமியாரை கைது செய்து அரக்கோணம் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

 ஆண் பக்தர்கள்

ஆண் பக்தர்கள்

அடுத்ததாக பாலியல் பிரச்சனை வெடித்துள்ளது.. இவருக்கு ஆண் பக்தர்கள்தான் பிடிக்குமாம்.. அவர்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வாராம்.. ஃபேஸ்புக் பக்கத்தில், மெசேஞசரில் பக்தர்களிடம் ஆபாசமாக பேசுவராம். பாலியலுக்கு அழைப்பு விடுப்பாராம்.. அப்போது தன்னுடைய ஆபாச போட்டோவையும் அந்த மெசேஞ்சரில் ஷேர் செய்வாராம்.. அப்படி யாராவது விருப்பமுடையவர்கள் இருந்தால், அவர்களை தன்னுடைய இடத்துக்கு வரவழைத்து நெருக்கமாக இருப்பாராம். பிடிக்கதாவர்கள் சாமியாரை பிளாக் செய்துவிட்டு போய்விடுவார்களாம்.

 அரசு வேலை

அரசு வேலை

இந்த சாமியார் ஆரம்பத்தில் ஒரு அரசு வேலையில் இருநதுள்ளார்.. பிறகுதான் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் சாமியாரான சக்தி அம்மாவுக்கு சேவை செய்வதற்காக அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். அதன்பிறகு தங்கக்கோயில் சாமியாரிடம் ஏதோ பிரச்சனை செய்து, தனியாக ஆன்மீக பணிகளை செய்துள்ளார்..

 நெருக்கம்

நெருக்கம்

அப்போதுதான் பாஜக, இந்து அமைப்புகளின் தலைவர்கள் பலர் சாமியாருக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். செல்வாக்கும் கூடியுள்ளது.. சொகுசு காரில் போய்தான் பூஜை, விழாக்களே செய்வாராம்.. இதையடுத்துதான் இந்து ஆச்சார்ய சபா என்ற அமைப்பின் தமிழக தலைவராக 3 வருடங்களுக்கு முன்பு சாமியாரை நியமித்துள்ளனர்.. அங்கும் சக சாமியார்களிடம் தகராறு செய்திருக்கிறார்.

சூனியம்

சூனியம்

இப்போது, இவருக்கு நெருக்கமான அந்த கமலக்கார ரெட்டியைதான் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்தான் இவருடைய பண பரிவர்த்தனையை கவனித்து கொண்டு வந்துள்ளார்.. பணத்தை தந்து ஏமாந்த பக்தர்கள், பணம் கேட்டால் "சூனியம் வைத்தவிடுவேன், கை, காலை செயலிழக்க செய்துவிடுவேன்" என்று சாமியார் மிரட்டுவாராம்.

டீச்சர்

டீச்சர்

இப்போதைக்கு சாமியார்மீது 4 வழக்குகள் பதிவாகி உள்ளன.. இதில் ஆற்காடு பகுதியை சேர்ந்த டீச்சர் புனிதவள்ளிக்கும் சம்பந்தம் இருக்கிறதாம்.. அவரையும் தேடி வருகிறார்கள். இன்னும் எத்தனை பேரை சாமியார் ஏமாற்றி பணம் பறித்தார் என்று தெரியவில்லை... விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+