பட்டாசு கடை தீவிபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் தற்கொலை.. வேலூரில் சோகம்!
வேலூர்: வேலூரில் பட்டாசு கடை தீவிபத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரியில் மோகன் (55) என்பவர் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது பேரக் குழந்தைகள் தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோர் இருந்தனர்.
இந்த நிலையில் பட்டாசு வாங்க வந்த ஒருவருக்கு பட்டாசை வெடித்து காண்பிக்க வெளியே வந்தார் மோகன். அப்போது வெடித்த பட்டாசுகளிலிருந்து தீப்பொறி கடைக்குள் சென்றுவிழுந்தது.

வெடித்து சிதறிய பட்டாசு
அப்போது மற்ற பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. உள்ளே குழந்தைகள் இருப்பதை அடுத்து பதறி போய் ஓடிய மோகன், குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தார். அப்போது அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியதால் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

பட்டாசுக் கடை
இந்த விபத்தத்தை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அனைத்து வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு துறைகள் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ள உத்தவிரட்டுள்ளார். அதன்படி பட்டாசுக் கடைகளில் உரிமையாளர், பணியாளர்களை தவிர குழந்தைகள், உறவினர்கள் யாரையும் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது.

மாவட்ட ஆட்சியர்
அதிக சேதத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மே மாதம் இறுதி வரை கடைகளில் அதிக பட்டாசுகளை இருப்பு வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இரு குழந்தைகள்
இந்த நிலையில் பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் வித்யாலட்சுமி (34). இவர் கணவனை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பட்டாசு விபத்தில் தந்தை, இரு குழந்தைகளையும் பறிகொடுத்த வித்யாலட்சுமி இரு தினங்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

சோகம்
இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வித்யா லட்சுமியை காலை முதல் காணவில்லை என உறவினர்கள் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் லத்தேரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் லத்தேரி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications