கள்ளக்காதல்.. ஜாலியா இருக்க முடியலை... ஜல்லி கரண்டியால் ஒன்றரை வயது குழந்தையை அடித்து கொன்ற தாய்
கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது குழந்தையை தாய் கொலை செய்துள்ளார்.
Recommended Video

வாணியம்பாடி: ஜாலியாக இருக்க முடியாததால், பெற்ற தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை ஜல்லிக்கரண்டியால் அடித்தே கொலை செய்துள்ளார். வாணியம்பாடியில் இன்னொரு அபிராமியா என்று மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
பெங்களூரிலேயே கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதில் 3-வது பெண் குழந்தை ரித்திகாவுக்கு ஒன்றரை வயது ஆகிறது.

ஒன்றரை வயது குழந்தை
இந்நிலையில், கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதை பல முறை கண்டித்தும் தனதை போக்கை நளினி மாற்றிக் கொள்ளாததால், சசிகுமார் அவருடன் வாழ மறுத்துள்ளார். இதனால், ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு, நளினி வாணியம்பாடியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

நளினி, முருகன்
கூடவே கள்ளக்காதலனையும் வாணியம்பாடிக்கு வரவழைத்து விட்டார். அங்கு கள்ளக்காதலன் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வந்தார். நேற்றுமுன்தினம் குழந்தை அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவது தங்கள் சந்தோஷத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்த நளினியும் முரளியும், ஜல்லி கரண்டி மற்றும் இரும்பு கம்பியால் குழந்தையை பலமாக அடித்துள்ளனர்.

உடலெங்கும் காயங்கள்
இதையடுத்து குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் சாக்கு சொல்லிவிட்டு இருவரும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வது போல் நாடகம் ஆடியுள்ளனர். உடல் முழுவதும் குழந்தைக்கு காயங்கள் இருப்பதை கண்ட டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மரணத்தில் சந்தேகம்
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை எடுத்து செல்ல முற்படும்போது குழந்தைக்கு உடற்கூறு செய்து தான் கொடுக்கப்படும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். குழந்தைக்கு உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்ட நளினியின் தந்தை பாஸ்கரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வாணியம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றினை தந்தார்.

அடித்தே கொன்றனர்
இதை தொடர்ந்து முரளி, நளினியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது இருவரும் குழந்தையை அடித்தே கொன்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த குழந்தையை அடித்து கொன்ற சம்பவம் வேலூர் மாவட்டத்தையே அதிர வைத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications