நளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத் துறை மருத்துவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று முன் தினம் இரவு மற்றொரு குற்றவாளியை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

Nalinis health condition is stable, says Doctor

இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இந்த நிலையில் நளினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வழக்கறிஞர் புகழேந்தி நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என சிறை அதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நளினி நலமுடன் உள்ளார் என்று சிறைத் துறை மருத்துவர் தெரிவித்தார். அவரது உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவை நார்மலாக உள்ளது. நளினியின் கழுத்து பகுதியில் காயம் ஏதும் இல்லை என்றும் நளினியின் உடல்நிலை சீராக உள்ளதாக வேலூர் சிறைத் துறை மருத்துவர் தகவல் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+