வங்கிகளில் தொழில் கடன் வாங்கித்தருவதாக பீலா விட்டு கமிஷன்! பாமக ஒன்றியச் செயலாளர் கைது!
வேலூர்: வங்கிகளில் தொழில்கடன் வாங்கித் தருவதாக கூறி 15க்கும் மேற்பட்டோரிடம் கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பாமக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்ற ஃபார்முலாவை பக்காவாக கடைபிடித்திருக்கிறார் இவர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பாமக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் சாம்ராஜ். இவர் காட்பாடி மற்றும் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலரிடம் தொழில்கடன் வாங்கித் தருவதாகவும் எல்லா வங்கிகளிலும் தனக்கு உயர் அதிகாரிகள் பழக்கம் உள்ளது எனவும் பீலா வீட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை குறைந்த வட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை தன்னால் பெற்றுக் கொடுக்க முடியும் என புரூடா விட்டிருக்கிறார்.
லோன் பெற்றுக்கொடுத்தால் தனக்கு 5% கமிஷன் தர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். லோன் சாங்ஷன் ஆன பிறகே கமிஷன் தொகையை கொடுப்போம் என சிலர் கூறியிருக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று யோசித்த சாம்ராஜ், வங்கிகளில் லோன் சாங்ஷன் செய்யப்பட்டதை போல் போலியாக கடிதம் தயாரித்து சீலிட்டு கையெழுத்திட்டு அதனை கடனுக்காக காத்திருந்தோரிடம் கொடுத்திருக்கிறார்.
தனக்கு தர வேண்டிய கமிஷன் தொகையை கொடுத்தால் தான் பணத்தை விடுவிக்க முடியும் எனக் கூறியதைக் கேட்டு 16 பேர் ரூ.30 லட்சம் வரை கமிஷனாக கொடுத்திருக்கின்றனர். ஆனால் அவர் சொன்னது போல் வங்கி கணக்கிற்கு லோன் வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 16 பேரும் பாமக ஒன்றியச் செயலாளர் சாம்ராஜிடம் பணம் பற்றி கேட்டிருக்கின்றனர்.
பல்வேறு காரணங்களை கூறி அவர்களை சந்திப்பதையே தட்டிக்கழித்து வந்திருக்கிறார் சாம்ராஜ். இதனால் பாதிக்கப்பட்டோர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி பாமக நிர்வாகி பேர்ணாம்பட்டு சாம்ராஜை போலீஸார் கைது செய்தனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கத்தான் செய்வார்கள். முன் பின் தெரியாத ஒருவர் நமக்கெப்படி இவ்வளவு பெரிய தொகையை கடனாக பெற்றுக்கொடுப்பார் என்று சிந்தித்திருந்தால் பணத்தை பறிகொடுத்திருக்க வேண்டிய பரிதாபம் ஏற்பட்டிருக்காது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications