அப்போ தெரியலையா.. ப்ளீஸ்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. பெண் போலீஸிடம் கெஞ்சி சண்டை போட்ட இளைஞர்!
பெண் போலீசுடன் ஆண் போலீஸ் காதல் சண்டை பிடித்தார்
வேலூர்: "என் கேரக்டர் உனக்கு அப்போ தெரியலயா.. இப்பதான் தெரியுதா.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. ப்ளீஸ்" என்று கலெக்டர் ஆபீசில் பெண் போலீசுடன் ஆண் போலீஸ் செய்த ரகளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வேலூர் கலெக்டர் ஆபீசில் பாதுகாப்பு பணியில் ஒரு பெண் போலீஸ் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு ஒரு இளைஞர் வந்தார்.. இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. பிறகு வாய்த்தகராறு அவர்களுக்குள் நடந்தது... அப்போதுதான் அங்கிருந்தவர்கள் எல்லோரும் திரும்பி இவர்களை பார்த்தனர்.
"என்னை கல்யாணம் செய்துக்கோ ப்ளீஸ்" என்று இளைஞர் பெண் போலீசிடம் கெஞ்சி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பெண் போலீசிடம் இருந்த நோட்டு புத்தகத்தை புடுங்கி வீசி அந்நபர் சத்தம் போட்டார்.. உடனே பெண் போலீஸ், "முதல்ல இங்க இருந்து கிளம்பு..எல்லாரும் பார்க்குறாங்க" என்றார்.

உயர் அதிகாரிகள்
அப்போதும் இளைஞர் நகரவில்லை.. "ஏன் என்னை ஏமாத்துறே.. கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு" என்று கேட்டு கொண்டே நின்றார். இதையடுத்து உயர் அதிகாரிக்கு தகவல் தர போவதாக பெண் சொன்னார்.. இதை கேட்டு ஆவேசம் அடைந்த இளைஞர், "என்னது, புகார் தர போறியா.. என்னன்னு? நீ எஸ்பிக்கே சொன்னாலும் என்னை எதுவும் பண்ண முடியாது.. இப்போதான் என் கேரக்டர் தப்பா தெரியுதா? அப்போ தெரியலையா?" என்று கத்தினார்.

பிரபு
இதை எல்லோருமே சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.. உடனே நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த சக பெண் போலீசார் ஓடிவந்து இருவரையும் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட இளைஞர் வேலூர் அருகே பூட்டுத்தாக்கு கிராமத்தை சேர்ந்தவராம்.. பெயர் பிரபு.. அவரும் போலீஸ்தானாம்.. சென்னை ஆயுதப்படையில் வேலை பார்த்து வருகிறார்..

காதலி
இவர் வேலூர் ஆயுதபடையில் வேலை பார்க்கும்போதுதான் இந்த பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பெண் போலீஸை அளவுக்கு அதிகமாக காதலித்துள்ளார்.. இருவீட்டாரின் சம்மதத்துடன் கல்யாண ஏற்பாடும் நடந்தது.. ஆனால், நாள் ஆக ஆக... பிரபு ரொம்ப டெரர்ர்ர்-ஆக இருக்கிறாராம்.. முரட்டுத்தனத்துடன் நடந்து கொள்வதுபோல இருந்தது. இதுதான் பெண் போலீசுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிகிறது.

டியூட்டி
அதனால் பிரபுவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.. இந்த ஆத்திரத்தில்தான் நேராக கலெக்டர் ஆபீசுக்கே போய் டியூட்டியில் இருந்த பெண் போலீசிடம், தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிரபு மிரட்டியும், கெஞ்சியும் உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த விஷயம் கடைசியில் எஸ்பி ஆபீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.. உடனே அந்த பெண் போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விளக்கம்
மேலும் பெண் போலீஸை பணி செய்ய விடாமல் தடுத்த பிரபு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.. அதேபோல பெண் போலீசிடம் இது சம்பந்தமாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.. ஒரு பெண் போலீஸ் மீது, அதுவும் பாதுகாப்பு பணியில் இருந்த சமயத்தில்.. அதுவும் கலெக்டர் ஆபீசுக்குள் நடந்த இந்த கலாட்டாதான் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications