வேலூர் இளம் பெண் அவசரப்பட்டு செய்த வேலை.. பையில் எல்லாமே தங்க நகை.. பாவம் அந்த ஆட்டோ டிரைவர்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து, பசுமாத்தூர் வழியாக மேல்மாயில் செல்ல நேற்று இரவு ஒரு பெண் ஆட்டோவில் ஏறினார் சொன்ன இடத்தில் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை இறக்கிவிட்டார். ஆனால் ஆட்டோவை விட்டு இறங்கிய உடன் நகையை காணாமல் ஆடிப்போனார். நகையை திருடியது ஆட்டோ டிரைவர் தான் என புகார் அளித்தார் அந்த பெண். இதுபற்றி விசாரித்த போலீசாருக்கு ட்விஸ்ட் காத்திருந்தது. கடைசியில் அந்த பெண் மீது தான் தவறு இருப்பது தெரியவந்தது என்ன நடந்தது என்று பார்ப்போம்.
இன்றைக்கு அவசர உலகத்தில் யாரும் யாரையும் நம்பி இருப்பது இல்லை.. எவ்வளவு தான் பழக்கமானவர்கள் என்றாலும் அவர்களையும் பணம் மற்றும் நகை விஷயத்தில் நம்ப முடியாது. திருமண மண்டபங்களில் சுற்றிலும் உறவினர்கள் இருக்கும் போது, யாரோ ஒருவர் நகையை திருடிவிடுவார். அந்த நகையை திருடியவரை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா இருந்தால் எளிதாக இருக்கும்..இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது கடினம். அதேபோல் பேருந்துகளில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது நகை அல்லது பணம் தொலைந்தால் அதை மீட்க அந்த நேரத்திலேயே உஷாராக இருந்தால் கண்டுபிடித்துவிடலாம். இல்லாவிட்டால் பணம் மற்றும் நகை போனது போனதுதான். அதேநேரம் நகை அல்லது பணத்தை தொலைத்தவர்கள் சம்பந்தமே இல்லாமல் சிலர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளிப்பார்கள். அப்படி புகார் அளித்த வேலூர் பெண்ணை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். என்ன நடந்தது என்று பார்ப்போம்.

வேலூர் பள்ளிகொண்டாவில் இருந்து, பசுமாத்தூர் வழியாக மேல்மாயில் செல்ல நேற்று இரவு ஒரு பெண் ஆட்டோ ஒன்றில் ஏறியிருக்கிறார். ஆட்டோ பசுமாத்தூர் வந்தபோது ஆட்டோவில் இருந்து இறங்கிச் சென்ற அந்த பெண், சிறிது நேரத்தில் அதே ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ மேல்மாயில் செல்ல புறப்பட்டது. அப்போது அவர் கொண்டு வந்த பையில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அந்த பெண் உடனடியாக கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து நகையை ஆட்டோ டிரைவர் திருடிவிட்டதாக கண்மூடித்தனமாக புகார் அளித்தார். புகாரின் பேரில் அவரையும், ஆட்டோ டிரைவரையும் போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை செய்தனர். ஆட்டோ டிரைவர் நகையை எடுக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.
அந்தப்பெண் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் பத்திரங்கள் இருந்தன. பையை உதறியபோது பையில் இருந்து நகைகள் விழுந்தன. அதைத்தொடர்ந்து போலீசார் ஆட்டோ டிரைவரை அனுப்பிவிட்டனர். பின்னர் ஆட்டோ டிரைவர் மீது பொய்யாக திருட்டுப் புகார் அளித்த அந்த பெண்ணை கேவி குப்பம் போலீசார் கடுமையாக எச்சரிக்கை செய்து, அனுப்பி வைத்தனர். நாம் ஒரு பொருளை தொலைத்தால் எல்லா பக்கமும் தேடிவிட்டு இறுதியாகவே யார் மீதாவது சந்தேகம் இருந்தால் சொல்லலாம். மாறாக தொலைத்த பொருளை தேடாமல், பொய்யாக புகார் அளித்தால் அது அவரை மட்டுமல்ல உங்களையும் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications