கல்யாணம் ஆகி மூணு நாள்தான்.. விருந்துக்கு அம்மா வீட்டுக்கு வந்த திவ்யா.. பிணமாக தொங்கினார்!!
போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
ராணிப்பேட்டை: கல்யாணம் ஆகி 3வது நாளில்... அம்மா வீட்டுக்கு விருந்துக்கு வந்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கிவிட்டார்!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவரது மகள் திவ்யா 21 வயதாகிறது! வாலாஜாபேட்டை அரசு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் வருடம் படித்து வந்தார்..

படித்து கொண்டிருந்த பிள்ளையை, காலேஜுக்கு போகவிடாமல் தடுத்து நிறுத்தி... திடீரென வீட்டில் கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.
சென்னையை சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது. ராகவேந்திரன் சென்னையில் போலீஸ்காரராக உள்ளார். கல்யாணம் முடிந்து மணப்பெண் திவ்யாவை அழைத்துக்கொண்டு சினிமா, கோயிலுக்கு சென்றார் மாப்பிள்ளை.
3வது நாள் திவ்யாவின் அம்மா வீட்டில் விருந்துக்கு அழைத்து இருந்தனர்.. அதனால், திவ்யாவின் அக்காள் சங்கீதா வீட்டுக்கு புதுமண தம்பதி விருந்து சாப்பிட சென்றனர். தடபுடல் சாப்பாடு தயாராக இருந்தது.. ஆனால் திவ்யா மட்டும் சரியாக சாப்பிடவில்லை.. யாருடனும் பேசவும் இல்லை.. என்னாச்சு என்று கேட்டதற்கு, உடம்பு சரியில்லை என்று மட்டும் பதில் சொல்லி உள்ளார்.
பிறகு தூங்க போகிறேன் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போன திவ்யா கதவை பூட்டிக் கொண்டு, ஃபேனில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார். கதவை தட்டியும் திறக்காததால், உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான் திவ்யா பிணமாக கிடந்தது தெரியவந்தது.. இதனால் குடும்பத்தினர் திவ்யா சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுதனர்.
கல்யாணம் ஆன 3-வது நாளில் தூக்கில் தொங்கிய இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை சப்-கலெக்டர் மற்றும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.. காலேஜ் படிப்பை நிறுத்திவிட்டதால், திவ்யா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications