வந்ததே லேட்டு.. டயலாக்கே கிடையாது.. ஒன்லி ஆக்ஷன்தான்.. சைகை காட்டியபடி போன பிரேமலதா
வேலூர் தொகுதியில் பிரேமலதா சைகை மூலம் ஏசி சண்முகத்துக்காக வாக்குசேகரித்தார்.
வேலூர்: பிரச்சாரத்துக்கு லேட்டாக வந்துவிட்டதால், பிரேமலதா எதுவுமே பேசாமல் சென்றுவிட்டது வேலூர் தொகுதி மக்களை அப்செட் ஆக்கிவிட்டது!
சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேலூர் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது "எங்க அம்மாவோட சொந்த தொகுதி இது. இந்த தொகுதிக்கு ஒரே மாப்பிள்ளை விஜயகாந்த்" என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி வாக்கு கேட்டு விட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் சார்பனாமேட்டில் பிரேமலதா வேலூர் தொகுதியில் ஏசி சண்முகத்துக்கு வாக்கு சேகரிப்பதாக இருந்தது. இதற்காக எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. ஆனால் பிரேமலதா ராத்திரி 10.15 மணிக்கு தான் வந்தார். கூடவே ஏ.சி.சண்முகமும் வந்திருந்தார்.
10 மணியோட பிரச்சாரம் டைம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் பேசினால் விதிமீறல் என்பதால் பிரேமலதாவும், ஏசி சண்முகமும், கைகளை உயர்த்தி உயர்த்தி இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு கேட்டனர்.
பிரேமலதா பேச்சை கேட்க நிறைய பேர் திரண்டிருந்தனர். இப்படி சைகை காட்டியதால் கூட்டத்தினரும் பதிலுக்கு இரட்டை விரலை காட்டிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்!












Click it and Unblock the Notifications