பாதி வழியில் நின்ற ஆம்புலன்ஸ், குழந்தை உடலை 10 கிமீ சுமந்தே சென்ற பெற்றோர்.. கலெக்டர் எடுத்த ஆக்சன்
வேலூர்: வேலூர் அருகே பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.
அணைக்கட்டு பகுதியில் குழந்தையின் சடலத்துடன் தாய் 10 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரின் கார் மலையில் கரடு முரடான பாதையில சிக்கியதால் புல்லட்டில் சென்று ஆய்வு செய்தார். வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

என்ன நடந்தது என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரிமலை பகுதியில் உள்ள அத்திமரத்துகொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளியாவார். இவரது மனைவி பிரியா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா.
கடந்த 26ம் தேதி இரவு விஜி தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை தனுஷ்கா உடன் காற்றுக்காக வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கி உள்ளார். இரவு 10 மணியளவில் குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்திருக்கிறது. அழுகை சத்தம் கேட்டு எழுந்தவர்கள் பாம்பு கடித்ததை அறிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
சிறிது தூரத்துக்கு மேல் பைக் செல்ல முடியவில்லை. இதனால் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு மலையில் இருந்து அடிவாரத்திற்கு வந்தனர். அங்கிருந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் எடுத்துவரப்பட்டது. அல்லேரி மலையடிவாரம் வரை கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் செல்ல பாதை இல்லாததால், அங்கேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை பெற்றோர் கையில் தூக்கியபடி மலைப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர்.
இதையடுத்து மாலை குழந்தை தனுஷ்காவின் உடல் மலைப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த வீடியோ மற்றும் செய்தி வெளியான நிலையில், கடும் விமர்சனம் எழுந்தது. அரசு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அல்லேரி மலைக்கிராமத்தில் பாம்பு கடித்ததில் ஒரு வயது குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டினார். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சிறிய, மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக வேலூர் போன்ற மாநகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால், இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? என்றும் அவர் கேள்வி எழுப்பனார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பாம்பு கடியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், அல்லேரி மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் தார் சாலை அமைக்கப்பட இருந்தது. அதற்குள் இந்த துயர நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை சாலை அமைக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று அடுத்து ஒரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரும், தலைமைச்செயலரும் உத்தரவிட்டுள்ளனர். அதனடிப்படையில், விரைவில் அல்லேரி மலைக்கிராமத்துக்கு தார் சாலை அமைக்கப்படும். மேலும், இங்கு கிளை சுகாதார நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்துக்கொள்ளை பகுதிக்கு சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கார் மலையில் கரடு முரடான பாதையில் சென்றது. ஆனால் அது குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்ல முடியாமல் சிக்கியது. இதையடுத்து புல்லட்டில் சென்று ஆய்வு செய்தார். வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications