தாறுமாறா போன ஷீலா.. மிரட்டிய சால்மன்.. வேலூர் மார்க்கெட்டில் கூட்டம்.. கடலுக்கு கிளம்பும் மீனவர்கள்
வேலூர்: வேலூரில் மீன்களின் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில், மீன்பிரியர்கள் எப்போதும் போலவே மீன்களை அதிகமாக வாங்கி சென்றிருக்கிறார்கள்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடந்தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும்..

அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்பட்டு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.. இதனால், குறைந்த ஆழத்திற்கு சென்று, குறைவான அளவிலான மீன்களை மட்டுமே மீனவர்கள் பிடித்து வருகிறார்கள்..
மீன் மார்க்கெட்: இதனால் தமிழகம் முழுவதும் மீன்கள் வரத்து குறைவாகவும், மீன்களின் விலை அதிகமாகவும் காணப்பட்டு வருகிறது... நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அனைத்து மீன் மார்க்கெட்களிலும் மீன்கள் விலை அதிகமாகவே விற்கப்பட்டது.
குறிப்பாக, வேலூர் மார்க்கெட்டிலும் இதே நிலைமைதான் நீடித்தது.. வேலூர் மார்க்கெட்டை பொறுத்தவரை, மங்களூர், கொச்சி, கோழிக்கோடு, கார்வார், கோவா போன்ற பகுதிகளிலிருந்தும், உள்ளூர் நீர்நிலைகளிலிருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வாடிக்கையாகும். அந்தவகையில், 5 முதல் 7 பெரிய சரக்கு லாரிகளில் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது..
கன்டெய்னர்கள்: ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் மீன் மார்க்கெட்டில், 70 டன் வரையும் மீன்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், மற்ற நாட்களில் தினமும் 40 டன் வரை விற்பனையாகிறது. நேற்றைய தினம் 2 கன்டெய்னர்களில் மட்டுமே மீன்கள் வந்திருக்கின்றன.. கிருஷ்ணகிரி, சாத்துனூர், மற்றும் மற்ற நீர்நிலைகளிலிருந்து மத்தி, கட்லா போன்றவை மீன்கள் மட்டுமே வந்திருந்ததால், விலை பன்மடங்கு பெருகி காணப்பட்டது.
அந்தவகையில், பெரிய வஞ்சிரம் கிலோ 1600 முதல் 2000 வரை விற்பனை செய்யப்பட்டது. சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.700, இறால் மீன் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வெள்ள கொடுவா ரூ.450, கடல் வவ்வா ரூ.900, கருப்பு வவ்வா ரூ.800, சீலா ரூ.700, சாலமன் ரூ.800, சங்கரா ரூ.450, தேங்காய் பாறை ரூ.600, கலங்கா ரூ.250, ஏரி விரால் ரூ.500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
மீன்பிரியர்கள்: மொத்தத்தில் நேற்றைய தினம் மீன்களின் விலைகள் எக்கச்சக்கமாக அதிகரித்திருந்த போதிலும், மீன்பிரியர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றார்களாம்.
மீன்பிடி தடைக்காலம் தற்போது 14ம் தேதி, தமிழகம் முழுவதும் முடிவுக்கு வரஉள்ளதால், விரைவில் மீன்கள் விலைகள் குறையும் என்று நம்பப்படுகிறது.. இந்த தடை காலத்தில் மீனவர்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தனர்.. படகுகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டன. இந்த பணிகளும் இப்போது முடிவடைந்து விட்டதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
உக்கடம் மார்க்கெட்: இதனிடையே, கேரளாவிலும் தடைக்காலம் தற்போது துவங்கியிருக்கிறது.. கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கேரளாவிலிருந்தும் மீன்கள் பெருமளவு வருவது வாடிக்கையாகும். ஆனால், இபபோது உக்கடம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் விலை உயர்ந்துவிட்டது. பெரிய மீன்களின் வரத்தும் வெகுவாக நின்றுவிட்டது. ஏற்கனவே மீன்கள் விலை உயர்வால், மீன்பிரியர்கள் நொந்துபோயுள்ள நிலையில், சிக்கன் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.. 16ம் தேதி வரை, சிக்கன் விலையில் இன்னும் விலை உயர்வு இருக்கலாம் என்கிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications