லாட்ஜில்.. பிணமாக கிடந்த அமுலு.. அடுத்த அறையில் தூக்கில் தொங்கிய கணவர்.. வேலூர் ஷாக்!
லாட்ஜில் தற்கொலை செய்து கொண்ட தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வேலூர்: லாட்ஜ் ரூமில்... படுக்கையில் சடலமாக விழுந்து கிடந்த அமுலுவை பார்த்ததும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. இந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், கேவிகுப்பத்தை அடுத்து கீழ்ஆலத்தூர் என்ற கிராமம் உள்ளது.. அங்கு வசித்து வந்தவர் புருஷோத்தமன்... 35 வயதாகிறது.. இவர் ஒரு ராணுவ வீரர்... மனைவி பெயர் அமுலு.. 26 வயதாகிறது.. இவர்களுக்கு கடந்த 2016-ல் கல்யாணம் நடந்தது.
2 வயசில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.. இப்போது அமுலு 2வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.. நிறைமாத கர்ப்பிணியும்கூட..

லாட்ஜ்
இந்நிலையில் புருஷோத்தமனின் அப்பா ஆறுமுகத்துக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், காஷ்மீரில் இருந்தவர், அப்பாவை பார்ப்பதற்காக லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருந்தார். அப்பாவை சிகிச்சைக்காக, சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.. அவரை அருகில் இருந்தே கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த ஆஸ்பத்திரி பக்கத்திலேயே ஒரு லாட்ஜில் ரூம் எடுத்தார்.. அமுலுவும் அவரும் தங்கியிருந்தனர்.

ரூம் கதவு
இந்நிலையில், புருஷோத்தமனை பார்ப்பதற்காக அவருடைய அண்ணன் ராஜ்குமார் லாட்ஜுக்கு வந்திருக்கிறார்.. ஆனால், ரூம் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது... ரொம்ப நேரமாக தட்டியும் யாரும் கதவு திறக்கவில்லை. அதனால், புருஷோத்தமனின் செல்போனுக்கு போன் செய்தார்.. ரிங் அடித்தது, ஆனால் யாரும் எடுக்கவில்லை.

பிணம்
இதனால் பதட்டமடைந்த ராஜ்குமார், உடனே லாட்ஜ் மேனேஜருக்கு விஷயத்தை சொன்னார்.. அந்த ரூமின் இன்னொரு சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோதுதான், அமுலு கட்டில் மேல் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. பிறகுதான் சற்று தூரத்தில் அதே ரூமில் ஃபேனில் புருஷோத்தமன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டனர்.

சடலங்கள்
உடனடியாக வேலூர் வடக்கு போலீசுக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்து 2 பேரின் சடலங்களையும் மீட்டனர்.. அப்போதுதான், அமுலுவின் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் இருந்ததை கண்டனர்.. அப்படி என்றால், அமுலுவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அதன்பிறகே புருஷோத்தமன் தூக்கில் தொங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், எதற்காக 2 பேரும் செத்து போனார்கள் என்று தெரியவில்லை.

தற்கொலை?
இருந்ததால், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, ராணுவ வீரர் புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். எதுவானாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியவரும். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதும் போலீஸார் இவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்ததா? அதனாலேயே ஆத்திரத்தில் மனைவியை கொன்று, தற்கொலையில் கணவன் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications