ரூ.20 பழைய நோட்டு இருக்கா? 2 ரூபாய் நாணயம்? அப்ப ரூ.17 லட்சம் ஜாக்பாட் ரெடி! கிறங்கி விழுந்த வேலூர்
வேலூர்: பழைய ரூபாய் நோட்டுகள், அல்லது பழைய நாணயங்கள் குறித்த ஆன்லைன் சந்தை குறித்த தகவல்கள் தொடர்ந்து மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்துள்ள பெரிய ஏரியூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம்.. 44 வயதான இவர் ஒரு விவசாயி ஆவார்.. மனைவி பெயர் சரஸ்வதி.. 40 வயதாகிறது.. இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.

ஆர்வம்: பிரகாசத்துக்கு எப்போதுமே சோஷியல் மீடியாவில் சற்று ஆர்வம் அதிகமாம்.. அதனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று அவ்வப்போது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.. கடந்த 6ம் தேதி, "பழைய 1, 2, 5 ரூபாய் நாணயங்களுக்கும், பழைய ரூபாய் நோட்டுகளுக்கும், அதன் வருடங்களுக்கு ஏற்றார்போல் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்" என்ற விளம்பரத்தை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பார்த்துள்ளார்.
இதைப்பார்த்ததுமே பிரகாசம், அந்த விளம்பரத்திலிருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பேசினார்.. எதிர்முனையில் சேலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசியிருக்கிறார்.
அவரிடம் பிரகாசம், "என்னிடம் பழைய நாணயங்கள் இருக்கின்றன.. பழைய ரூபாய் நோட்டுகளும் உள்ளன.. அதற்கெல்லாம் எவ்வளவு பணம் கிடைக்கும்" என்று விவரங்களை கூறி கேட்டுள்ளார்..
அபூர்வமான ரூபாய்: அதற்கு அந்த நபர், உங்களிடம் இருக்கும் நாணயம் மிகவும் அபூர்வமானது.. மிகவும் பழமையானது... அதனால், எப்படியும் 17 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்றார்.
இதற்கு பிரகாசம், ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் இப்போது தந்தால், பணத்தை எப்போது தருவீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு அந்த நபர், 17 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.. அதனால், வருமானவரித்துறை போன்ற சில சிக்கல்கள் வரலாம்.. அதனை முன்கூட்டியே சரிசெய்ய வேண்டுமானால் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.. பிரகாசமும் அந்த பணத்தை கூகுல் பே மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார்...
கூகுள் பே: பின்னர் அருண்குமார், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, ஒருவரின் ஆதார் கார்டு போட்டோவை பிரகாசத்துக்கு அனுப்பி வைத்து, இவர் மூலம் தான் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.. நேற்றுமுன்தினமும் போன் செய்த அருண்குமார், வேனில் பணத்துடன் வந்து கொண்டிருக்கிறேன்.. வர்ற வழியில் வேன் ரிப்பேராகிவிட்டது.. அதை சரிசெய்ய 5 ஆயிரம் வேண்டும் என்றாராம். உடனே அந்த பணத்தையும் கூகுள்பே மூலம் அனுப்பியிருக்கிறார்.
இப்படியே, ஏதேதோ காரணங்களை சொல்லி சொல்லியே, கிட்டத்தட்ட 1.50 லட்சம் வரை பிரகாசத்திடமிருந்து பெற்றுக்கொண்டாராம் அருண்குமார்.. ஆனால் கடைசிவரை 17 லட்சம் ரூபாய் வந்துசேரவேயில்லை.. எத்தனையோ முறை போன் செய்தாலும், ஸ்விட்ச் ஆப் என்றே வருகிறதாம்.. இப்போது ஏமாந்து நொந்துபோன பிரகாசம், வேப்பங்குப்பம் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. போலீசாரும் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கவர்ச்சி விளம்பரம்: சமீபகாலமாகவே, அரியவகை பழைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை வைத்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஆன்லைன் சந்தையில் பெருகி வருகிறது. இந்த நோட்டுகளை விற்பதற்கென்றே இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன... இந்த பழைய நோட்டுகளுக்கும், நாணயங்களுக்கும் டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்குமாம்..
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். காரணம், ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி எப்போதுமே ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications