Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசர அவசரமாக.. கைக்குழந்தையுடன்.. மேடையை நோக்கி உதயநிதியிடம் ஓடி வந்த பெண்.. ஆஹா.. வியந்துபோன வேலூர்

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சி கவனத்தை ஈர்த்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

வேலூர்: உதயநிதி ஸ்டாலினின் வேலூர் வருகையானது, அவரது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பை பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

Recommended Video

    இனிமேல் அதிமுகவை திட்ட வேண்டாம்.. எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க! பரபரக்கும் உதயநிதி ஸ்டாலின்

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி திமுக சார்பில் 511 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மூலகேட் பகுதியில் நேற்று இரவு நடந்தது.

    அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் தலைமை வகித்தார்... இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்எல்ஏ நலத்திட்டங்கள் வழங்கினார்..

    கலைஞர்

    கலைஞர்

    அப்போது உதயநிதி பேசும்போது, "இங்கு வரும் வழியில் நிறைய பேர் என்னிடம் மனுக்கள் கொடுத்தனர். மனு கொடுத்தால் நடக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.. தேர்தல் அறிக்கையில் சொல்லிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்... நான் பெரியார், அண்ணாவை பார்த்ததில்லை. கலைஞர், பேராசிரியர், இப்போதைய முதல்வர் ஸ்டாலினை தான் பார்த்தேன். இங்கு பொற்கிழியை வாங்கிய கழகத்தின் முன்னோடிகள் மறு உருவமாக பெரியார், அண்ணாவை பார்க்கிறேன்" என்றார்.

    நந்தகுமார்

    நந்தகுமார்

    உதயநிதி தன் பேச்சை துவங்கும்போதே, "இளைஞர் அணி செயலராக பொறுப்பேற்றவுடன் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும், முதலாவதாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதும் இந்த வேலுர் மாவட்டத்தில்தான் என்று சொன்னதும், கைதட்டல்கள் விண்ணைப் பிளந்தன.. வேலூர் மக்கள் ஜில்லென்று நெகிழ்ந்து போனார்கள். "அன்று அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது, அணையே இல்லாத இந்த தொகுதிக்கு திமுக வென்றதும் அணை கட்டப்படும் என்று உறுதி தரப்பட்டது.. இப்போது தமிழக முதல்வர் இந்த தொகுதியில் அணையை கட்ட முடிவெடுத்துள்ளார்.. ரூ.50 கோடி செலவில் விரைவில் இங்கு அணை கட்டப்படும் என்று உறுதியும் தந்துள்ளார்" என்று மேடையிலேயே உதயநிதி அறிவித்தார்.

     மேடையில் நந்தகுமார்

    மேடையில் நந்தகுமார்

    நந்தகுமாரை பற்றி சொல்லும்போது, "இப்போ மேடையில் பார்க்கும்போது எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் சட்டமன்றத்திலும் பரபரப்பாக இருப்பார்.. ஒரு இடத்தில் உட்கார மாட்டார்.. அவர் சீட்டில் மட்டும் உட்கார மாட்டார்.. அவர் சீட்டை தவிர எல்லார் சீட்டிலும் உட்கார்ந்திருப்பார். என் சீட்டில் கூட வந்து உட்கார்ந்துட்டு போவார்.. சபாநாயகர் சீட்டில் மட்டும்தான் இதுவரைஉட்காரவில்லை".. என்று சொன்னபோது கூட்டமே கலகலத்தது..

     4 நிமிஷம் ஆயிடுச்சா?

    4 நிமிஷம் ஆயிடுச்சா?

    பிறகு நலத்திட்ட உதவிகளை பற்றி சொல்லி கொண்டே வந்த உதயநிதி அங்கிருந்தோரிடம் "4 நிமிஷம் எனக்கு டைம் முடிஞ்சிடுச்சா" என்று கேட்கவும், மேடையில் இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்துவிட்டனர்.. தன் பேச்சை முடிக்கும்போது, "அனைவரும் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும்" என்று சொல்லி தன் பேச்சை முடித்தார் உதயநிதி.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    உதயநிதி பேசி முடித்ததுமே நிர்வாகிகள் மேடையை சூழ்ந்து கொண்டனர்.. ஆளுயர மாலைகளை கொண்டு வந்து உதயநிதிக்கு சூட்டினர்.. பிறகு நீண்ட வாள் ஒன்றை பரிசாக அளித்தனர்.. பொன்னாடைகளையும், பூக்கூடைகளையும் உதயநிதிக்கு மாறி மாறி அளித்தனர்.. இதற்கு நடுவில் பொதுமக்களும் சிலர் மேடையேறி வர ஆரம்பித்துவிட்டனர்.. அவர்கள் செல்பிகளை எடுக்க முயன்றும் முடியாமல் போகவே, இதை பார்த்த உதயநிதி, அவர்களை அழைத்து செல்பி எடுக்க ஒத்துழைப்பு தந்தார். அவர்கள் பரிசாக தந்த புத்தகங்களையும் பெற்றுக் கொண்டார்.

    கைக்குழந்தை

    கைக்குழந்தை

    உதயநிதி எங்கே கிளம்பி விடுவாரோ என்ற அவசரத்தில், அந்த கூட்டத்திலும் ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் மேடையை நோக்கி ஓடிவந்தார்.. தன் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு உதயநிதியிடம் கேட்டுக் கொண்டார்.. அந்த குழந்தையை கையில் வாங்கி கொண்ட உதயநிதி, தன்னுடைய சகோதரியின் பெயரை சூட்டி மகிழ்ந்தார்.. பிறகு குழந்தையை அந்த பெண்ணிடம் தந்து, பத்திரமாக கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். மொத்தத்தில் உதயநிதிக்கு இந்த வேலூர் கூட்டம், அரசியலில் அழுத்தமான முத்திரையை மட்டுமல்ல, இறுக்கமான பாசத்தையும் பதித்து விட்டு போயுள்ளது என்றே சொல்லலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+