நடக்குமா? நடக்காதா சார்?.. ஸ்டாலின் ஒன்று சொல்ல.. கடைசியில் உதயநிதி வேறு ஒன்று சொல்கிறாரே!
திமுக தலைமையில் தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 6 மாதத்தில் ஆட்சி அமையும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
வேலூர்: திமுக தலைமையில் தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 6 மாதத்தில் ஆட்சி அமையும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் அடுத்த வாரம் நடக்கிறது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். இதற்காக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

என்ன பிரச்சரம்
கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில், இந்தியா முழுக்க பாஜக வெற்றி பெற்றது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை. தமிழகத்தில் பாஜகவையும், அதிமுகவையும் திமுக விரட்டி அடித்து உள்ளது.

என்ன சொன்னார்
வேலூரில் திமுக வெற்றி உறுதியாகிவிட்டது. 100 சதவிகிதம் இங்கு கதிர் ஆனந்த்தான் வெற்றிபெறுவார். தமிழகத்தில் சில நாட்களில் சட்டசபை தேர்தல் வரும். அதிகபட்சம் 6 மாதத்திற்கு மேல் தமிழகத்தில் ஆட்சி நீடிக்காது.

மாற்றம்
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்பார். ஆட்சி மாறும். இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் போது அதிமுக மொத்தமாக டெபாசிட் இழக்கும் என்று உதயநிதி கூறியுள்ளார்.

ஸ்டாலின் என்ன சொன்னார்
மாறாக தமிழகத்தில் 1 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார். 1 மாதத்தில் ஆட்சி தானாக கவிழும், நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். 1 மாதத்தில் ஸ்டாலின் ஆட்சி கவிழும் என்று கூறி உள்ள நிலையில், தற்போது உதயநிதி 6 மாதத்தில் ஆட்சி கவிழும் என்றது கூறி உள்ளது தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications