பள்ளி மேஜையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. நேரடியாக தலையிட்ட மாவட்ட ஆட்சியர்.. முக்கிய ஆக்ஷசன்
வேலூர்: அரசுப் பள்ளியில் மாணவர்கள் மேஜையை உடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த சில காலமாகவே ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, அட்டகாசம் செய்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது.

மேஜை சேதம்
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், இங்கு +2 படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜையை உடைத்துச் சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை
அந்த வீடியோவில் அவர்களைச் சுற்றி இருக்கும் மாணவர்கள் இரும்பு மேஜையை உடைக்க உற்சாகப்படுத்துவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்று மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளனர்.

என்ன காரணம்
+2 தேர்வு முடிய உள்ள நிலையில், ஃபேர்வெல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் மாணவர்கள் இப்படி மேஜைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதனிடையே வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனும் சம்மந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்து அறிவுரை வழங்கினார்.

மாணவர்கள் சஸ்பெண்ட்
மாணவர்கள் இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறிய மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மீறி ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சம்மந்தப்பட்ட 10 மாணவர்களை வரும் மே 5ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

அடிக்க பாய்ந்த மாணவர்கள்
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரேக்கார்ட் நோட் சமர்ப்பிக்கும்படி ஆசியர்கள் கூறியதால், பிளஸ் 1 மாணவர்கள் சிலர் மிரட்டினர். அவரை ஆபாசமாகப் பேசி, அடிக்க முயலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மொத்தம் 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications