திருப்பத்தூரில் அரசு பள்ளியில் சர்ப்ரைஸ் தந்த உதவி கலெக்டர்! கெத்தா உட்காரும்மா! நெகிழ்ச்சி சம்பவம்
வேலூர்: ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்து, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பது கல்விதான் என்பதால், கல்வியின் அவசியத்தை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.. அதனால்தான் கல்வி கற்க ஆர்வம் காட்டிய மாணவியின் கோரிக்கையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி சமீபத்தில் நிறைவேற்றியிருந்தார். இந்நிலையில், ஒரு நெகிழ்ச்சி சம்பவம் திருப்பத்தூர் அரசு பெண்கள் பள்ளியில் நடந்துள்ளது. அது என்ன?
தமிழ்நாட்டில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை, அரசு பள்ளியைவிட தனியார் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்..

நம் மாநிலத்தில் சுமார் 12000க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் நிர்ணயிப்பு சட்டம் 2009-கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இயக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயக்குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee ) வரையறுத்துள்ள கட்டணத்தையே பின்பற்றியும் வருகின்றன..
ஆனாலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளும் தரத்திலும், கல்வியிலும் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன.. பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள், உணவு உட்பட அனைத்தையுமே நம்முடைய அரசும் செய்து தந்து வருகிறது. இதனால் வருடா வருடம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர்
அதுமட்டுமல்ல, அரசு பள்ளியில் படித்து, பின்னாளில் கலெக்டராக உயர்ந்தவர்கள், இன்றைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார்கள்..
கடந்த மாதம்கூட, ஈரோட்டில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தது.. வான்மதி என்பவர், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்...
உதயசந்திரன் கலெக்டர்
அந்த நேரத்தில் பள்ளி ஆண்டு விழாவுக்கு கலெக்டராக இருந்த உதயசந்திரன் வந்துள்ளார்.. உதயச்சந்திரனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாகமான வரவேற்பும், மரியாதையும் பார்த்த மாணவி வான்மதி, தானும் ஒரு கலெக்டராக வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார்.. இந்த இலக்குடனே வான்மதி படித்து, இப்போது மகாராஷ்டிராவில் ஒரு மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்தபோது, தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் வந்தார்.. வான்மதியை கண்டதுமே, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம், விடாமல் முயற்சி செய்யுங்கள் என்று அங்குள்ள மாணவிகளுக்கு அறிவுறுத்திவிட்டு சென்றார் கலெக்டர் வான்மதி.
திருப்பத்தூர் கலெக்டர்
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருப்பத்தூர் பகுதியில் அரசு நிதி உதவி பெறும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு தமிழக அரசு சார்பாக 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், மாவட்ட கலெக்டர் சிவ சவுந்தரவள்ளியும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
கெத்தா உட்காரும்மா
நிகழ்ச்சி முடிந்ததுமே அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டபோது, கலெக்டர் சிவ சவுந்தரவள்ளியும் காரில் ஏற முற்பட்டார். அப்போது அங்கிருந்த 11ம் வகுப்பு மாணவி, கலெக்டரிடம் சென்று, '' மேடம் எனக்கு சின்ன வயதில் இருந்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை... உங்களுடைய கார் சீட்டை தொட்டு பார்க்கட்டுமா?'' என்று கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு நெகிழ்ந்துபோன மாவட்ட ஆட்சியர், ''தொட்டு எல்லாம் பார்க்க வேண்டாம், உட்கார்ந்தே பார்'' என்று சொல்லி மாணவியை தன்னுடைய காரின் சீட்டில் உட்கார சொன்னார்.. ஆனால், காரின் இருக்கையில் உட்கார மாணவி கூச்சப்பட்டார்.
நெகிழ்ச்சி சம்பவம்
உடனே கலெக்டர் ''வெட்கப்படாதே, நல்லா கெத்தா உட்காரும்மா, அப்போதான் உனக்கும் நல்லா படிச்சி என்னை மாதிரி கலெக்டர் ஆகணும்னு எண்ணம் வரும்.. ஒருநாள் நீயும் கலெக்டராக உயரும்போது, எனக்கு போட்டோ எடுத்து அனுப்பணும்" என்றார்.
கலெக்டர் மாணவியை ஊக்கப்படுத்திய இந்த சம்பவம், அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு நெகிழ்ச்சியையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications