ஆரணி சின்னப்பாப்பா, ராணிப்பேட்டை புவனேஸ்வரி.. கள்ளக்காதலில் இப்படி இறங்கிட்டாங்க? மலைத்த திருவண்ணாமலை
வேலூர்: இந்தியா முழுவதிலுமே கள்ளக்காதல் அட்டூழியங்கள் பெருகி வருகின்றன. கணவன்மார்களை மனைவிமார்களும், மனைவிமார்களை கணவர்மார்களும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.. இதற்கு நடுவில் பெற்ற குழந்தைகளையும் சேர்த்து கொன்றுவிடுகிறார்கள்.. இதோ நேற்று ஒரேநாளில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த சம்பவம் தமிழக மக்களை உலுக்கி எடுத்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ளது விளாங்குப்பம்.. இந்த கிராமத்தில் வசித்து வரும் தம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா.. இவருக்கு 55 வயதாகிறது.. கூலித்தொழிலாளியாக உள்ளார்.. இவரது மனைவி ஜெயம்மாள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இதையடுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த 50 வயது சின்னபாப்பா என்பவருடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.. சின்னபாப்பா தன்னுடைய கணவரை பிரிந்து, 2 மகள்களுடன் தனியாக வசித்து வருபவராவார்.. இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி சந்தவாசலில் வசித்து வருகிறார்.
சின்ன பாப்பா பிடிவாதம்
கடந்த சில நாட்களாக மகள் வீட்டில் தங்கியிருக்கிறார் சின்ன பாப்பா.. இதனால் சின்ன பாப்பாவை தொடர்பு கொள்ள முடியாமல் ராஜா தவித்து போனார்.. ஒருவழியாக போனில் தொடர்பு கொண்டு பேசிய ராஜா, சின்ன பாப்பாவை தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு சின்ன பாப்பா மறுப்பு சொன்னதால், தகராறு வெடித்துள்ளது..
இந்நிலையில், மகள் வீட்டுக்கு வெளியே சின்ன பாப்பா நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்குச் சென்ற ராஜா, சின்ன பாப்பா மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார்.. ஆனால், அது தவறுதலாக சின்ன பாப்பாவின் பேத்தி ஆஷிகா என்ற 3 வயது குழந்தையின் அருகில் பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்துள்ளது. இதில், குழந்தைக்கு தீக்காயமும் ஏற்பட்டது..
இதைப்பார்த்து பயந்துபோன ராஜா, அங்கிருந்து எகிறி தப்பி ஓடிவிட்டார்.. தீக்காயம் அடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய ராஜாவை பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை சம்பவம்
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கொடைக்கானல் அடுத்த புதுக்குடியானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு.. இவருக்கு 30 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் புவனேஸ்வரி.. ஆனால், தம்பதி இடையே நிறைய கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.. இதனால், புவனேஸ்வரி கணவரை விட்டு பிரிந்து, தன்னடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்தக்காரர் விஜய் என்ற 26 வயது இளைஞருடன் தகாத உறவும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. இதன்விளைவு, புவனேஸ்வரி இப்போது 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார்.
கொந்தளித்த கணவர்
இந்த விஷயம் கணவர் பாலுவுக்கு தெரிந்து கொந்தளித்துள்ளார்.. தன்னுடைய மனைவி தன்னிடமிருந்து பிரிந்து போனதற்கு காரணமே மாமியார் தான் என்று கோபப்பட்டார்.. இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக் கொடுத்து மனைவியை கெடுத்ததே, மாமியார் என்பதை உறுதியாக நம்பினார் பாலு.
இதற்காக சம்பவத்தன்று மதுபோதையில் மாமியார் வீட்டுக்கு சென்று, மாமியார் பாரதியை தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.
எகிறி தப்பிய பாலு
அடுத்ததாக, மனைவியிடம் தகாத உறவு வைத்திருக்கும் விஜய்யை கொல்ல முடிவு செய்து, குடியானூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.. ஆனால், விஜய் வீட்டில் இல்லாததால், விஜய்யின் அப்பா அண்ணாமலை, அம்மா ராஜேஸ்வரியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார். இந்த சம்பவம் குறித்து இப்போது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய பாலுவை தேடி வருகிறார்கள்.
மனைவி கள்ளக்காதல் வைத்திருந்ததால் அதற்கு காரணமாக 3 பேரை வெட்டி சாய்த்துவிட்டார் கணவர்.. ஆனால், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான மனைவியை???












Click it and Unblock the Notifications