அப்பாவா இருந்தாலும் போட்டினு வந்துட்டா விடக்கூடாது! உதயநிதியிடம் சொன்ன டிஆர்.பாலு! என்ன மேட்டர்
வேலூர்: இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் உதயநிதி முதலில் ஒன்றைச் சொல்ல.. அதற்கு டி.ஆர்.பாலு பதில் அளிக்க மேடையில் சுவாரசியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து முப்பெரும் விழாவை திமுக கொண்டாடும். இந்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு என்பதால் இத்துடன் சேர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவும் நடைபெற்றது.

வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இதற்காகப் பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க இருந்த தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர். காலை முதலே பட்டிமன்றம் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முப்பெரும் விழா: இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் சென்றார். அங்கே அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு தரப்பட்டது. முதல்வரின் வருகையை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2000 போலீஸ் அதிகாரிகள் வேலூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூரில் டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இன்று நடந்த திமுக பவள விழாவில் கி. சத்தியசீலனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அதேபோல சுந்தரத்திற்கு அண்ணா விருதும், ஐ. பெரியசாமிக்குக் கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த இந்த விழாவில் பல மூத்த திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலரும் உரையாற்றிய நிலையில், அமைச்சர் உதயநிதி ஒன்று சொல்ல அதற்கு டி.ஆர்.பாலு பதில் அளிக்க மேடையில் சுவாரசியம் ஏற்பட்டது.
உதயநிதி: இந்த நிகழ்வில் முதலில் பேசிய அமைச்சர் உதயநிதி, "வரும் டிசம்பர் மாதம் மிகப் பெரியளவில் இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்த போது நெல்லையில் தலைமையில் முதல் மாநாடு நடந்தது. அதில் ஒரு 50% அளவுக்கு நாங்கள் இந்த மாநாட்டை நடத்துவோம். உங்களை யாராலும் மிஞ்ச முடியாது. உங்கள் உழைப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
டிஆர் பாலு பதில்: அமைச்சர் உதயநிதிக்குப் பிறகு திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு பேசினார். அப்போது உதயநிதியின் இளைஞரணி மாநாடு பற்றிய பேச்சு குறித்து டி.ஆர்.பாலு சில கருத்துகளைத் தெரிவித்தார். டிஆர் பாலு பேசுகையில், "எனக்கு முன்னால் இப்போது இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார். அவர் ரொம்ப அடக்கி வாசித்தார். அப்பாவாக இருந்தாலும் போட்டினு வந்துவிட்ட விடக்காது. அவர் கழகத்தின் தலைவர் தான். ஆனால் அவர் ஒடி அடி பாய்ந்தால் இளைஞரணியில் இருக்கும் இவர் 10 அடி பாய வேண்டும்.
ஆனால் 50% என்று சொல்லி அடக்கி வாசித்துள்ளார். இனிமேல் இந்த 50% எல்லாம் போட்டியில் இருக்கக் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைச் செய்ய வேண்டும். நீங்கள் எந்தளவுக்குப் பாய்வீர்கள் என்பதைத் தான் சொல்ல வேண்டும். இப்படி தன்னை தாழ்த்தி டிசம்பர் மாநாடு குறித்து உதயநிதி பேசியுள்ளார். ஆனாலும், நான் சொல்கிறேன் இந்த மாநாடு நிச்சயம் மிகப் பெரியளவில் வெற்றி பெறும். அவருக்கு எனது வாழ்த்துகள்" என்றார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications