Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TVK Vijay: வேலூரில் விஜய் சொன்ன மாஸ் குட்டி கதை – கிளைமேக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்டா

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது தவெக தலைவர் விஜய் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் தலை காட்டி வருகிறார். வேலூரில் பேசிய விஜய் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளையை ஒப்பிட்டு ஒரு குட்டி கதையை பகிர்ந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை இந்த தேர்தல் போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. விஜய் பிரிக்கும் வாக்குகள் வெற்றி தோல்வியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

tvk-vijay-vijay-shared-kutty-story-in-tvk-vellore-meeting

வேலூரில் விஜய்

விஜய் தவெக கட்சியின் முதல் மாநாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு. கூட்டணி ஆட்சி என்கிற திரியை கிள்ளி போட்டார். தற்போதுவரை விஜய் கட்சியுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. அதேநேரத்தில் தாங்கள் இருக்கிற கூட்டணியில் விஜய் பெயரை சொல்லி பேரத்தை அதிகரிக்கும் வியூகத்தை கடைபிடிக்கிறார்கள். இதையறிந்த தவெகவும் தனித்து போட்டியிட ஆயத்தமாக வருகிறது.

விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. விஜய் கடந்த 13 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்தார். கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து, சேலம் கூட்டத்தில் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம், அகரம்சேரி பகுதியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். வெளியில் வாட்டி வதைப்பதால் இந்தமுறை பந்தல் போட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஜய் குட்டி கதை

கூட்டத்திற்கு வருவோருக்கு இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. தவெக கட்சி சார்பிலும் பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளனர். அதை தவெகவினர் கேட்கவில்லை. அடையாள அட்டை இல்லாமலேயே அரங்கத்திற்குள் முண்டியத்து நுழைந்தனர். விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தியும் கேட்காமல், அவரின் வாகனத்தை பின் தொடர்ந்தனர். சுமார் 50,000 பேர் அங்கு திரண்டுள்ளனர்.

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் ஒரு குட்டி கதையுடன் விஜய் தன் பேச்சை தொடங்கினார். அப்போது அவர், "ஒரு பெரிய ரோடு. பரபரப்பான பகுதி. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. அந்த சந்திப்பில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு, காலில் மண்ணை சீறி நின்று கொண்டிருந்தது. யாரும் அருகில் செல்ல முடியவில்லை. யாராவது அதை அடக்கினால் தான் அருகில் செல்ல முடியும். அந்த ஊரில் உள்ள ஒருவர் தான் அடக்க முடியும். அவரும் அப்போது ஊரில் இல்லை.

சீறிய ஜல்லிக்கட்டு காளை..

கூட்டத்தில் இருந்த சிலர் நாங்கள் பார்க்காத காளையா என்று அதை அடக்க முயற்சித்தனர். ஒருவராலும் காளையை அடக்க முடியவில்லை. காளை அவர்கள் அனைவரையும் அடித்து வீசியது. கடைசியாக ஒரு சின்ன பையன் காளையை அடக்க சென்றான். அவனை கூட்டத்தில் இருந்த பெரியவர்கள், எங்களாலேயே முடியவில்லை. உனக்கு ஏன் இந்த வேலை. காளையிடம் தனியாக மாட்டிக் கொள்ளாதே என பரிதாபப்ட்டார்கள்.

அந்த சின்ன பையன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு கெத்தாக சென்றான். அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். காளை அவனை நோக்கி வேமாக வந்தது. காளை அருகில் வந்தவுடன் அவன் ஒரு புல்லு கட்டை எடுத்து நீட்டினான். காளை ஆக்ரோஷத்தை கைவிட்டு அமைதியாக சாப்பிட்டது. அந்த பையன் காளையை அப்படியே அருகில் உள்ள புல் காட்டிற்கு அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விட்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்தான்.

அசால்ட் செய்த சின்ன பையன்

அடிபட்டுகிடந்த அனுபவசாலிகள் தலையை தொங்க போட்டனர். பேசிய பேச்சு அப்படி. வாய் இருக்கிறது என்பதற்காக நச நச என்று பேசினார்கள். எப்படிப்பா அந்த காளையை அடக்கினே என்று அந்த பையனிடம் ஒரு பெரியவர் கேட்டார். எனக்கு அந்த காளை கோபமாக இருந்ததாக தெரியவில்லை. பசியாக இருந்த மாதிரி தெரிந்தது. அதனால் புல்லு கட்டை நீட்டினேன் என்றான்.

பெரியவர், அனுபவசாலி, சிறியவர் என்று யாராக இருந்தாலும் என்ன செய்து அந்த பிரச்சனையை சரி செய்கிறார்கள் என்பதுதான் மேட்டர். நீ சூப்பருப்பா என்று அந்த பையனை பெரியவர் பாராட்டினார். அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாடு அரசியல் களம். அந்த பெரியவர்கள் தமிழ்நாடு மக்கள். பாக்கெட்டிற்குள் கெத்தாக வலம் வந்தது நம் தவெக. இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+