மூளையை முடக்கிய பாக்டீரியா! 8 பேர் பலி.. வாணியம்பாடி பல் மருத்துவமனையில் சுகாதாரத்துறை ரெய்டு
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
வாணியம்பாடியை சேர்ந்த இளைஞர் ஸ்ரீராம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் பல் மருத்துவமனை மீது குற்றம்சாட்டி வந்தார். இந்த மருத்துவமனையில் தனது தாய் 2023ல் சிகிச்சை பெற்றிருந்தார் என்றும், ஆனால் அடுத்த ஓரிரு வாரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார், இதற்கு காரணம் மருத்துவமனையின் தரமற்ற தவறான சிகிச்சைதான் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இவரது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் 2023ம் ஆண்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
உயிரிழந்தவர்களின் மாதிரியை பரிசோதித்ததில் அவர்கள், 'மெலியோயிடோசிஸ்' எனும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. 'பர்கோல்டேரியா சூடோமல்லே' எனும் பாக்டீரியாவால் இந்த தொற்று பரவும். சுகாதாரமற்ற நீரின் மூலமும் மண்ணிலிருந்தும் இது இந்த பாக்டீரியா மனிதர்களுக்கு பரவும். ஆசிய உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் இந்த பாக்டீரியா பரவும் என்றாலும் தமிழ்நாட்டில் இந்த தொற்று இதற்கு முன்னர் கண்டறியப்பட்டதில்லை.
அப்படி இருக்கையில் உயிரிழந்தவர்களுக்கு மட்டும் இந்த தொற்று எப்படி ஏற்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுந்திருந்தது. மறுபுறம் ஸ்ரீராமின் புகாரும் கவனம் பெற்றிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளடக்கிய குழுவை நியமித்திருந்தது. விசாரணை நடந்து முடிந்திருக்கும் நிலையில், உயிரிழப்புக்கு தனியார் பல் மருத்துவமனையின் அலட்சிய போக்குதான் காரணம் என்று குழு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதாவது சலீன் பாட்டிலை திறப்பதற்கு 'பெரியோஸ்டியல் லிஃப்ட்' எனும் கருவியை மருத்துவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த கருவி பல் அறுவை சிகிச்சையின் போது திசுக்களைத் தூக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும். மீண்டும் அந்த பாட்டில் சரியாக மூடாததால் அதில் தொற்று பாக்டீரியா உருவாகியிருக்கிறது. மீண்டும் அதே கருவியை கொண்டு பாட்டில் திறக்கப்பட்டிருக்கிறது. கருவியை சரியாக சுத்தப்படுத்தாமல் அடுத்தடுத்த நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் தொற்று 11 பேர் வரை பரவியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆங்கில ஊடகத்தில் வெளியாகியிருந்த செய்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞானமீனாட்சி, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மருத்துவமனை மீதும், அதன் உரிமையாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications