Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் கழிவறைக்கு சென்ற பிஎஸ்என்எல் ஊழியர்.. யாருமே எதிர்பார்க்காத சம்பவம்.. ஆடிப்போன உறவுகள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரை அடுத்த சதுப்பேரி ஏரியை புதுப்பித்து சுற்றுலா தலமாக்குவதற்கு சுமார் ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து . ஏரியையொட்டி உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு உள்ளனர். அதன்படி ஆக்கிரமிப்பில் உள்ள வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் எடுத்த முடிவினை கேட்டு அரசு ஊழியர்கள் ஆடிப்போனார்கள்.

வேலூர் மக்களுக்கு பெரிய அளவில் சுற்றுலா தலங்கள் இல்லை.. அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளன. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் வகையில், சதுப்பேரி ஏரியை சுற்றுலா தலமாக்குவதற்கு சுமார் ரூ.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியையொட்டி உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்வளத்துறையினர் அதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளனர். சதுப்பேரி ஏரியையொட்டி நீர்நிலை பகுதியில் உள்ள கொணவட்டம் தேவிநகரில் 49 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

அங்குள்ள அனைத்து வீடுகளையும் காலி செய்யும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் செயற்கை நீருற்று அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அப்பகுதி மக்கள் அதற்குஎதிர்ப்பு தெரிவித்து வருகறிர்கள். அதேநேரம் அங்கிருந்து அகற்றுவதாக இருந்தால், அந்த பகுதியிலேயே நிரந்தரமாக தங்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் சதுப்பேரியை ஒட்டியுள்ள தேவிநகருக்கு வந்த மின்ஊழியர்கள் அங்குள்ள மின்இணைப்புகளை கணக்கெடுத்ததாகவும், வருகிற 19-ந் தேதியுடன் அந்த பகுதிக்கு மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், 21-ந் தேதியன்று வீடுகள் இடித்து அகற்றப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை காலிசெய்யும்படி நோட்டீஸ் வழங்கியதால் அங்கு வசித்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் மணி (வயது 72) என்பவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.. தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்த வீட்டை காலி செய்யும்படி கூறுகிறார்களே என்று அவர் தனது குடும்பத்தினரிடம் கவலைப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அங்கு மேற்கூரை இரும்பு கம்பியில் மணி கயிற்றில் தொங்கி கொண்டிருந்தார். அதை கண்டு ஆடிப்போன குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.

இதற்கிடையே மணியின் குடும்பத்தினர் மற்றும் தேவிநகரை சேர்ந்த பொதுமக்கள் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வேலூர் வடக்கு, தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து மணி வாழ்க்கையை முடித்துக் கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். வீட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கியதற்காக ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் எடுத்த முடிவு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+