பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை.. கழுத்தை அறுத்த கொடூர தந்தை.. ஷாக் காரணம்
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் இப்படியும் ஒரு கொடூர தந்தையை இருந்துள்ளார்.. அவர் செய்த மோசமான காரியத்தை கேட்டு அந்த மக்கள் ஆடிப்போய் இருக்கிறார்கள். பிறந்து 26 நாட்களே ஆன குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார் அதற்கு அவர் சொன்ன காரணம் மிக மோசமானது. செய்தியை விரிவாக பார்ப்போம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அருகே உள்ள கிராமம் தேவிசெட்டிகுப்பம். இங்கு வாழ்ந்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன் மணிகண்டனுக்கு 30 வயது ஆகிறது. இவர்இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

மணிகண்டனுக்கும் அணைக்கட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகள் ஹேமலதா (22) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது.
ஹேமலதா திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பம் ஆனார். இதற்கிடையே அவரது கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார். இதனால் ஹேமலதா திருமணம் ஆன 3வது மாதமே தலை பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில ஹேமலதாவிற்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து ஹேமலதா தனது கணவனிடம் கூறி மகிழ்ந்தார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.
அங்கு மனைவி மற்றும் குழந்தையை பார்த்த மணிகண்டன் குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை எனக்கூறி மனைவி ஹேமலதாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது கடும் ஆத்திரத்துடன் மிருகத்தனமான செயலில் இறங்கியதாக கூறப்படுகிறது. அது காண்போரை அதிர்ச்சிக்கள்ளாக்கியது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துள்ளார். பின்னர் மணிகண்டன் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்தம் கொட்டியபடி வலி தாங்காமல் பச்சிளம் குழந்தை கதறியது. இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக இதனிடையே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, தந்தையே கழுத்தை அறுத்த சம்பவம் அணைக்கட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications