யார் அந்த வேலூர் பெண்? பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் இப்படியுமா செய்வாங்க?
வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நெபுலைசர் கருவியை பெண் ஒருவர் திருடி செல்லும் சிசிடி காட்சி வெளியாகி உள்ளது. இதுவரை மூன்று முறை திருடு போயிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள ஒரு நகரம் ஆகும். இந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. எனவே பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன் உயர்தரமாக கட்டப்பட்டு தற்போது அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை மூன்று முறை நெபுலைசர் (சுவாச கருவி) திருடுபோய் உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் புகார் ஏதும் கொடுக்காமல் புதிதாக வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நோயாளியாக ஒன்றாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்திருந்த நெபுலைசரை (சுவாச கருவி) திருடி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பேரணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது அரசு மருத்துவமனைக்குள் நோயாளிகள் பயன்படுத்தும் நெபுலைசர் (சுவாச கருவி) திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மதுபாக்கெட்டுகள் பறிமுதல்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே அரவட்லா மலை பாதையில் பேரணாம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் டுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்தி நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்களிடம் 500 கர்நாடகா மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து 500 கர்நாடகா மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு போலீசார்பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த தீபன் ராஜ் (23) வசந்தராஜ்( 25 )ஆகியோரையும் மேலும் கர்நாடகா மது விற்பனையில் ஈடுபட்ட நாகராஜ் (47 ) ஆகிய மூன்று பேரை கைது செய்த பேரணாம்பட்டு போலீசார் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications