வீடு கட்ட ஆசைப்பட்ட ராணிப்பேட்டை ராஜா.. வேலையை காட்டிய காண்ட்ராக்டர்.. வேலூர் கோர்ட் சூப்பர் உத்தரவு
வேலூர்: ராணிப்பேட்டையில் ராஜா என்பவருக்கு சொன்ன நேரத்தில் வீடு கட்டித்தராத காண்ட்ராக்டருக்கு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரரர் ஒப்பந்தப்படி கட்டிடத்தை கட்டாமல் வெறும் 60 சதவீதம் மட்டுமே முடித்துக் கொடுத்துள்ளார். இதனால் வீடு கட்ட ஆசைப்பட்ட ராஜா, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுள்ளார்.
பொதுவாக நீங்கள் வாங்கிய பொருள் குறைபாடு இருந்தால், கடை, ஓட்டல், உணவகம், பேருந்து, மின்சாரம் என உங்களுக்கு கட்டணம் செலுத்தி பெறும் சேவைகளில் சேவை குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற முடியும்.

இதேபோல் நீங்கள் வாங்கிய பொருளுக்கு செலுத்திய விலை பொருளின் எம்ஆர்பி விலையை விட அல்லது சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருந்தாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இதேபோல் சட்டத்திற்கு புறம்பாக நுகர்வோரின் வாழ்க்கைக்கு உத்திரவாதமற்ற அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள் விற்கப்பட்டாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்.
இதற்காகவே மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு இதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. இக்குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு, நுகர்வோர் பிரச்சினைகள் தொடர்பாக வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பல்வேறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன, அப்படி தாக்கல் செய்யும் வழக்கில் நீதிமன்றம் இழப்பீடு அளிக்க உத்தரவிடுகிறது. அப்படித்தான் ராணிப்பேட்டை ராஜா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவருக்கு ராணிப்பேட்டையில் காலிமனையில் 1,300 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் எட்வர்டு வினோத்ராஜா என்பவருடன் கடந்த 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி வீடு கட்டுவதற்கான முழுத்தொகையில் 75 சதவீதத்தை ஒப்பந்ததாரரிடம் ராஜா கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஒப்பந்ததாரர் எட்வர்டு வினோத்ராஜா கட்டுமான பணியை தாமதப்படுத்தி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 60 சதவீத பணியை மட்டுமே முடித்ததாக கூறப்படுகிறது.. அதனால் ஒப்பந்தப்படி கட்டுமான பணியை முடிக்காத ஒப்பந்ததாரர் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜா வழக்கு தாக்கல் செய்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த வேலூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி சுந்தரம், கட்டுமான சேவை குறைபாடு காரணமாக ராஜாவிற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அதனை எட்வர்டு வினோத்ராஜா ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications