வேலூர் அரசு பஸ்ஸில் மிஸ்ஸான ரூ.5 லட்சம்.. கரூர் ரோட்டில் சேஸிங்.. போலீசால் பால்கோவா வியாபாரி ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அரசு பஸ்சில், பால்கோவா விற்ற பணம் 5 லட்சத்துடன் ஏறியிருக்கிறார் ஒரு வியாபாரி.. ஆனால், அந்த பணம் திருடு போய்விட்டது.. இதையடுத்து, போலீசில் புகார் தந்துள்ளார் பணத்தை தொலைத்த வியாபாரி.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் நடவடிக்கையை கையில் எடுத்தனர். இது தொடர்பான செய்திகள்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வேலூர்: தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வக்குமார் (40). திருப்பதிக்கு வந்த செல்வக்குமார் மீண்டும் தூத்துக்குடி செல்வதற்கு நேற்று இரவு (ஏப்ரல் 13) திருப்பதி பஸ் நிலையம் வந்துள்ளார். பின்னர் திருப்பதி - தூத்துக்குடி அரசு விரைவு பேருந்தில் ஏறி செல்வக்குமார் பயணம் செய்து கொண்டிருந்தார்.

Vellore Government Bus Karur

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார்.. இவருக்கு 39 வயதாகிறது.. திருப்பதியில் பால்கோவா கடையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்... இந்நிலையில், திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக செல்வகுமார் அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்... அப்போது பால்கோவா விற்ற பணம், ரூ. 5 லட்சத்தை கையில் வைத்திருந்தார்.

வேலூர் புது பஸ் ஸ்டாண்டு

வேலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு, பஸ் வந்து நின்றதுமே அதில் இளைஞர் ஒருவர் ஏறியிருக்கிறார்.. அவர் செல்வகுமாரிடம் எனக்கு பணம் தேவைப்படுகிறது. நான் உங்களுக்கு UPI மூலம் பணம் அனுப்புகிறேன், அதை எனக்கு நீங்கள் பணமாக தந்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்..

பிறகு, டிபன் சாப்பிடுவதற்காக செல்வகுமார் பஸ்சிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார்.. ஆனால், தன்னிடமிருந்த பணப்பையை பஸ்ஸிலேயே வைத்து விட்டு இறங்கியுள்ளார்.. இதைக்கவனித்த அந்த இளைஞர், செல்வகுமாரின் பணப்பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார், அலறி கூச்சலிட்டு, அந்த நபரை விரட்டிக் கொண்டே ஓடினார்.. ஆனால், இளைஞரோ பணப்பையுடன் அங்கிருந்து மாயமானார்... இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் தந்தார் செல்வக்குமார்.

பால்கோவா விற்ற பணம்

போலீசாரும், அப்புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. உடனடியாக பஸ் ஸ்டாண்டிலிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்.. அதிலிருந்த காட்சிகளின் அடிப்படையில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (28) என்பவர்தான், ரூ.5 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பணத்தை திருடிய கதிர்வேலை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்தனர்.. அதாவது புகார் கிடைத்த 9 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்து, அவரிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஜி பேயில் பணம்

இதுகுறித்து போலீசார் தரப்பில் சொல்லும்போது, "பணம் திருடுபோனதாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இரவு 9 மணிக்கு பாதிக்கப்பட்டவர் புகார் தந்தார்.. இதையடுத்து உடனடியாக விசாரணை ஆரம்பமானது.. முதலில், பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடம் குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது, டிக்கெட் கட்டணத்திற்காக ஜி பேயில் அந்த குற்றவாளி பணம் செலுத்தியதாக கண்டக்டர் கூறினார்.

உடனே ஜிபேயில் இருந்த செல்போன் நம்பர் எடுக்கப்பட்டது.. அந்த நம்பரை வைத்து, டவர் லொகேஷன் பதிவு செய்யும் பணி நடந்தது.. இதன் அடிப்படையில் பணத்தை திருடியவர், சேலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது உறுதியானது. பிறகு உடனடியாக 3 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பமானது..

ஒருபுறம் லொகேஷன் மறுபுறம் தனிப்படை

ஒருபுறம் குற்றவாளியின் செல்போன் நம்பரின், டவர் லொக்கேஷன் ஆய்வு நடந்து கொண்டேயிருந்தது. மறுபுறம் சேலத்தை நோக்கி தனிப்படை விரைந்து கொண்டேயிருந்தது. அதற்குள் அந்த குற்றவாளி கரூரை நெருங்கி கொண்டிருந்தார்.. முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், கரூர் எல்லையில் போலீசார் தயாராக காத்திருந்தனர்.. அவர்கள் குற்றவாளியை சுற்றி வைத்து பிடித்தனர்" என்றார்..

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. பணம் திருடப்பட்ட 9 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளதுடன், ரூ.5 லட்சம் பணத்தையும் மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்திருக்கிறார்கள்.. காவல் துறையினரின் துரிதமான இந்த செயல்பாடு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+