Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் குணாதேவி.. இரண்டே பொய்யில் 70 லட்சம் சம்பாத்தியம்.. ஐஏஎஸ் அகாடமியில் நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த குணாதேவி என்ற பெண் வேலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் டிகிரி படித்தார்.இவர் அந்த கல்லூரியின் பேராசிரியரிடம் தனக்கு புற்று நோய் உள்ளதாகவும், ஐஏஎஸ் படிக்க விரும்புவதாகவும் உருக்கமாக பேசினார். உடனடியாக அவருக்கு 16 லட்சத்தை பேராசிரியர் தந்துள்ளார். அதேபோல் பொதுமக்கள் உதவி மூலம் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் பெற்ற குணாதேவிக்கு குணமான பெண்ணாக இல்லை.. ஏமாற்றியது தெரியவந்தது.. எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

உதவி செய்பவர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிப்பது என்பது மிக மோசமான துரோகம் ஆகும். அதுவும் கல்விக்கு உதவி செய்பவர்களையும், மருத்துவத்திற்கு உதவி செய்பவர்களையும் ஏமாற்றி பல லட்சம் சம்பாதிப்பது என்பது உண்மையிலேயே மிக மோசமான நம்பிக்கை துரோகம் ஆகும். இது போன்ற மோசடி செய்பவர்களால், உண்மையிலேயே உதவி தேவைப்படுவோர், உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Vellore Gunadevi arrested for cheating college professor of Rs 70 lakhs by asking for help to study IAS

வேலூர் கல்லூரி

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் குணாதேவி என்பவர் வேலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் கடந்த 2018 முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை இளங்கலை ஆங்கிலம் படித்தார். அப்போது அந்த துறைத்தலைவரும், பேராசிரியருமான ரூபேஷ் சதீஷ்குமாரிடம், குணாதேவி கல்லூரி படிப்புக்கு பின்னர் ஐஏஎஸ் படிக்க உள்ளதாகவும், அதற்கு போதிய வசதி இல்லாததால் நிதியுதவி செய்யும்படியும் கேட்டிருக்கிறார். அவருக்கு உதவ நினைத்த பேராசிரியர் ரூபேஷ்சந்திரகுமார் முதற்கட்டமாக ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளாராம்.

முசோரி ஐஏஎஸ் அகாடமி

இந்த நிலையில் கடந்தாண்டு குணாதேவி செல்போனில் ரூபேஷ் சதீஷ்குமாரை மீண்டும் தொடர்பு கொண்டு தான் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருவதாகவும், தந்தை இறந்துவிட்டதால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக பல லட்சம் தேவைப்படுவதாகவும், அதற்கு பணஉதவி செய்யும்படி உருக்கமாக கேட்டிருக்கிறார்.

16 லட்சம் அனுப்பினார்

தன்னிடம் பேசிய மாணவி உண்மையை சொல்வதாக, நம்பிய பேராசிரியர் ரூபேஷ்சதீஷ் குமார் உடனடியாக ரூ.16 லட்சத்தை அந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அவர் வாட்ஸ்-அப் குரூப் ஒன்றை உருவாக்கி தனது நண்பர்கள், குடும்பத்தினர், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலரை அதில் இணைத்து மாணவியின் மருத்துவ சிகிச்சை மற்றும் படிப்பிற்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

70 லட்சம் மோசடி

அதன்பேரில் ஏராளமானோர் அவருடைய வங்கிக்கணக்கிற்கு ரூ.54 லட்சம் வரையும் அதன்படி ரூ.54 லட்சத்தையும் அந்த பெண்ணின் மருத்துவச்செலவு மற்றும் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காகவும் பேராசிரியர் வழங்கி உள்ளார். பேராசிரியர் மட்டும் குணாதேவிக்கு பல்வேறு வகையில் நிதி திரட்டி ரூ.70 லட்சம் கொடுத்துள்ளார். இதுதவிர சமூக வலைதளங்களில் கொடுத்த விளம்பரம், பதிவு மூலம் பலர் ரூ.10 லட்சம் வரை குணாதேவியின் வங்கி கணக்கிற்கு செலுத்தி இருக்கிறார்கள்

ஐஏஎஸ் அகாடமியில் அம்பலம்

இந்த நிலையில் குணாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். பயிற்சி முடிந்துவிட்டதாக கூறி அவரின் ஐ.டி. கார்டை பேராசிரியரின் செல்போனுக்கு அனுப்பியிருக்கிறார். அதைக்கண்ட போது தான் அவருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முசோரியில் உள்ள அந்த ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு சென்று அவரை பற்றி பேராசிரியர் விசாரித்தார். அப்போது குணாதேவி அங்கு பயிற்சி பெறவில்லை என்று தெரிய வந்தது.

ஐஏஎஸ் மற்றும் புற்றுநோய்

இதையடுத்து பேராசிரியர், பல நபர்களிடம் குணாதேவி குறித்து விசாரித்தபோது தான் ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக மற்றும் மருத்துவச்செலவிற்காக என்று கூறி பேராசிரியர் உள்பட பலரிடம் ரூ.80 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரூபேஷ் சதீஷ்குமார் செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறினாராம். மேலும் அந்த பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.

குணாதேவி கைது

அதனால் அதிர்ச்சி அடைந்த ரூபேஷ் சதீஷ்குமார் இதுதொடர்பாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் நம்ப வைத்து ஏமாற்றி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் குணாதேவி ஐ.ஏ.எஸ். படிப்பதற்காக மற்றும் மருத்துவச்செலவிற்காக என்று கூறி ஏமாற்றி ரூ.80 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. அதையடுத்து குணாதேவியை வேலூர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவர் இதுபோன்று வேறு யாரிடமும் பணம் பெற்று ஏமாற்றி உள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+